வியாழக்கிழமை, மார்ச் 28, 2024
வியாழக்கிழமை, மார்ச் 28, 2024

HomeFact Check50 இலட்சம் இளைஞர்கள் பாஜகவிலிருந்து விலகி பாமகவில் இணைந்ததாக பரவும் புகைப்படம்!

50 இலட்சம் இளைஞர்கள் பாஜகவிலிருந்து விலகி பாமகவில் இணைந்ததாக பரவும் புகைப்படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

50 இலட்சம் இளைஞர்கள் பாஜகவிலிருந்து விலகி பாமகவில் இணைந்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

50 இலட்சம் இளைஞர்கள் பாஜகவிலிருந்து விலகி பாமகவில் இணைந்ததாக பரவும் புகைப்படம்

Twitter Link | Archive Link

இப்புகைப்படத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

50 இலட்சம் இளைஞர்கள் பாஜகவிலிருந்து விலகி பாமகவில் இணைந்ததாக பரவும் புகைப்படம்  - 1

Facebook Link

50 இலட்சம் இளைஞர்கள் பாஜகவிலிருந்து விலகி பாமகவில் இணைந்ததாக பரவும் புகைப்படம்  - 2

Facebook Link

Also Read:
 தீண்டாமை காரணமாக ஆற்றில் குளித்த இளைஞர்களை அடித்து விரட்டிய அந்தணர்; வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

50 இலட்சம் இளைஞர்கள் பாஜகவிலிருந்து விலகி பாமகவில் இணைந்ததாக கூறி  தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக வைரலாகும் இச்சம்பவம் குறித்து பொது ஊடகங்களில் செய்தி ஏதேனும் வந்துள்ளதா என தேடினோம். இதில் இவ்வாறு ஒரு சம்பவம் நடந்ததற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அதன் பின்னணி குறித்து தேடினோம். இத்தேடலில் வைரலாகும் புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டதல்ல, ஒன்பது வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது.

உண்மை செய்தி
Screenshot of PMK blogspot Article

மாமல்லபுரத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு பாமக சார்பில்  சித்திரை திருவிழா மிக பிரம்மாண்டமாக நடத்தப்பெற்றது. இதில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் கலந்துக்கொண்டனர். இத்தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமே தற்போது 50 இலட்சம் பாஜகவினர் பாமகவில் இணைந்ததாக கூறி பரப்பப்படுகின்றது.

Also Read: ஐஏஎஸ் அதிகாரி ஆர்த்தி டோக்ரா காலில் பிரதமர் மோடி விழுந்து வணங்கியதாக பரவும்  வதந்தி!

Conclusion

50 இலட்சம் இளைஞர்கள் பாஜகவிலிருந்து விலகி பாமகவில் இணைந்ததாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் ஒன்பது ஆண்டுகளுக்கு முந்திய பழைய படம் என்று நமக்கு கிடைத்த ஆதாரத்தின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: False/False Context

Sources

Media Report from The PMK Website Dated 26/04/2013

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular