வியாழக்கிழமை, மார்ச் 28, 2024
வியாழக்கிழமை, மார்ச் 28, 2024

HomeFact CheckFact Check: பாலியல் புகாரில் கைதான பாதிரியார்… சீமான் படத்தை பயன்படுத்தியதா தந்தி தொலைக்காட்சி?

Fact Check: பாலியல் புகாரில் கைதான பாதிரியார்… சீமான் படத்தை பயன்படுத்தியதா தந்தி தொலைக்காட்சி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பாலியல் புகாரில் தேடப்பட்ட கன்னியாகுமாரி பாதிரியார் கைதான செய்தியில்  சீமான் படத்தை தந்தி தொலைக்காட்சி பயன்படுத்தியது

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கன்னியாகுமாரி பாதிரியார் பெனடிக் ஆன்றோ போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். இதுக்குறித்து தந்தி தொலைக்காட்சி வெளியிட்டிருந்த நியூஸ்கார்டில் சீமானுடன் பெனடிக் ஆன்றோ இருக்கும் புகைப்படத்தை பயன்படுத்தியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கன்னியாகுமாரி பாதிரியார் கைதான செய்தியில்  சீமான் படத்தை தந்தி தொலைக்காட்சி பயன்படுத்தியதாக வைரலாகும் நியூஸ்கார்ட்
Screengrab from Twitter@PeriyarDravidam
கன்னியாகுமாரி பாதிரியார் கைதான செய்தியில்  சீமான் படத்தை தந்தி தொலைக்காட்சி பயன்படுத்தியதாக வைரலாகும் நியூஸ்கார்ட்
Screengrab from Twitter@Schumy_Official
கன்னியாகுமாரி பாதிரியார் கைதான செய்தியில்  சீமான் படத்தை தந்தி தொலைக்காட்சி பயன்படுத்தியதாக வைரலாகும் நியூஸ்கார்ட்
Screengrab from Twitter@Ashokmeesalur08

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: அதிமுகவுடனான கூட்டணியை முறிக்க அண்ணாமலைக்கு யார் அதிகாரம் தந்தது என்று கேள்வி எழுப்பினாரா பாஜக ஹெச்.ராஜா?

Factcheck / Verification

பாலியல் புகாரில் தேடப்பட்ட கன்னியாகுமாரி பாதிரியார் கைதான செய்தியில்  சீமான் படத்தை தந்தி தொலைக்காட்சி பயன்படுத்தியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக தந்தி தொலைக்காட்சி இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் ஆராய்ந்தோம். இதில் பாதிரியார் கைது குறித்து தந்தி தொலைக்காட்சி நியூஸ்கார்ட் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. ஆனால் அந்த நியூஸ்கார்டில் சீமான் படம் இடம்பெற்றிருக்கவில்லை, பாதிரியார் படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது.

இதனடிப்படையில் காண்கையில் வைரலாகும்  நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிந்தது. தந்தி தொலைக்காட்சியின் சமூக ஊடகப் பொறுப்பாளர் வினோத் குமாரும் இந்த நியூஸ்கார்ட் போலியானது என்பதை உறுதி செய்தார்.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: Fact Check: அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம் என்றாரா வானதி சீனிவாசன்?

Conclusion

பாலியல் புகாரில் தேடப்பட்ட கன்னியாகுமாரி பாதிரியார் கைதான செய்தியில்  சீமான் படத்தை தந்தி தொலைக்காட்சி பயன்படுத்தியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்ட போலியான ஒன்று என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources

Facebook post from Thanthi Tv, dated March 20, 2023
Phone conversation with Vinoth Kumar, Thanthi Tv, dated March 20, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular