வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact CheckPoliticsகேஸ் சிலிண்டரை அநாவசியமான பொருள் என்றாரா அண்ணாமலை?

கேஸ் சிலிண்டரை அநாவசியமான பொருள் என்றாரா அண்ணாமலை?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

கேஸ் சிலிண்டரை அநாவசியமான பொருள் என்று தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கேஸ் சிலிண்டரை அநாவசியமான பொருள் என்று அண்ணாமலை குறிப்பிட்டதாக பரவும் தகவல்

“கேஸ் சிலை உயர்வும் மின் கட்டண உயர்வும் ஒன்றல்ல. இன்றைய நவீன காலக்கட்டத்தில் பல இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் சமைப்பதே இல்லை, ஏன்  சமைக்கக் கற்றுக்கொள்வது கூட இல்லை. அவர்களுக்கு கேஸ் சிலிண்டர் விலை என்பது அநாவசியம்.

ஸ்விக்கி, ஜொமோட்டோ போன்ற செயலிகள் மூலமாக வீடுவரை உணவு வந்து விடுகிறது. இன்னும் சில காலத்தில் உணவை ஊட்டி விடவும் இயந்திரங்கள் வந்துவிடும். அந்த இயந்திரங்கள் இயங்க மின்சாரம் அத்தியாவசியம்.

அநாவசியத்தின் விலையுயர்வும் அத்தியாவசியத்தின் விலையுயர்வும் எப்படி ஒன்றாகும்” என்று அண்ணாமலை குறிப்பிட்டதாக தமிழக பாஜகவின் ஃபேஸ்புக் பதிவு ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கேஸ் சிலிண்டரை அநாவசியமான பொருள் என்று அண்ணாமலை குறிப்பிட்டதாக பரவும் தகவல் - 01

Facebook Link

கேஸ் சிலிண்டரை அநாவசியமான பொருள் என்று அண்ணாமலை குறிப்பிட்டதாக பரவும் தகவல் - 02

Facebook Link

கேஸ் சிலிண்டரை அநாவசியமான பொருள் என்று அண்ணாமலை குறிப்பிட்டதாக பரவும் தகவல் - 03

Facebook Link

Also Read: எடப்பாடி பழனிசாமி குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவும் விஷம பதிவு!

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

கேஸ் சிலிண்டரை அநாவசியமான பொருள் என்று தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டதாக ஃபேஸ்புக் பதிவு ஸ்கிரீன்ஷாட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, உண்மையிலேயே இவ்வாறு ஒரு பதிவை தமிழக பாஜக பதிவிட்டதா என அதன் அதிகார்ப்பூர்வ ஃ பேஸ்புக் பக்கத்தில் தேடினோம். 

இந்த தேடலில் வைரலாகும் பதிவை தமிழக பாஜக பக்கத்தில் பதிவிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தமிழக பாஜகவின் சமூக ஊடகப் பிரிவின் தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமாரைத் தொடர்பு கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். 

இதற்கு அவர், ”இது போலியானது. இவ்வாறு ஒரு பதிவை நாங்கள் பதிவிடவில்லை”  என்று விளக்கமளித்தார்.

இதனைத் தொடர்ந்து வைரலாகும் ஸ்கிரீன்ஷாட் போலியானது என்று நிர்மல்குமார் அவரின் சமூக ஊடகப் பக்கத்திலும் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

Also Read:  உதயநிதி ஸ்டாலின் கனடாவில் நடிகைகளுடன் இருப்பதாக பரவும் புகைப்படம்!

Conclusion

கேஸ் சிலிண்டரை அநாவசியமான பொருள் என்று தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டதாக பரவும் ஃபேஸ்புக் பதிவின் ஸ்கிரீன்ஷாட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: False

Sources

Phone conversation with CTR Nirmakumar, President, BJP IT Wing on 20/07/2022
CTR Nirmakumar’s Tweet, tweeted on 20/07/2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular