புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024
புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024

HomeFact Checkஆட்டோ சங்கருக்கு வீரவணக்கம் செலுத்தியதா நாம் தமிழர் கட்சி?

ஆட்டோ சங்கருக்கு வீரவணக்கம் செலுத்தியதா நாம் தமிழர் கட்சி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

நாம் தமிழர் கட்சி ஆட்டோ சங்கருக்கு வீரவணக்கம் செலுத்தியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

நாம் தமிழர் கட்சி ஆட்டோ சங்கருக்கு வீரவணக்கம் செலுத்தியதாக பரவும் தகவல்

‘மானமறவன் அய்யா தானியங்கி சங்கர் அவர்களுக்கு வீரவணக்கம்’ என்று குறிப்பிட்டு ஏப்ரல் 23, 2018 அன்று ஆட்டோ சங்கருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் 23 ஆம் ஆண்டு நினைவுநாள் அனுசரித்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நாம் தமிழர் கட்சி ஆட்டோ சங்கருக்கு வீரவணக்கம் செலுத்தியதாக பரவும் தகவல் - 01
Screenshot from Twitter @sansbarrier
நாம் தமிழர் கட்சி ஆட்டோ சங்கருக்கு வீரவணக்கம் செலுத்தியதாக பரவும் தகவல் - 02
Screenshot from Facebook / vasurajasekarbjp
நாம் தமிழர் கட்சி ஆட்டோ சங்கருக்கு வீரவணக்கம் செலுத்தியதாக பரவும் தகவல் - 03
Screenshot from Facebook / soundar.rajan.54922

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தீபாவளிக்கு ₹600 கோடி மது விற்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதா?

Fact Check/Verification

நாம் தமிழர் கட்சி ஆட்டோ சங்கருக்கு வீரவணக்கம் செலுத்தியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில்  வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக குறிப்பிட்ட தேதியில் (ஏப்ரல் 23, 2018) நாதக இவ்வாறு ஒரு நிகழ்வை நடத்தியதா என்பதை உறுதி செய்ய, நாதகவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இதுக்குறித்து தேடினோம், இத்தேடலில் இவ்வாறு நிகழ்வு நடந்ததற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசனைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் படம் குறித்து கேட்டோம். இதற்கு அவர் “இது பொய்யான தகவல், இவ்வாறு ஒரு நிகழ்வு எப்போதும் நடந்ததில்லை என்று பதிலளித்தார்.

Also Read: ஆவின் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி பயன்படுத்தப்படுகின்றதா?

Conclusion

நாம் தமிழர் கட்சி ஆட்டோ சங்கருக்கு வீரவணக்கம் செலுத்தியதாக ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Phone conversation with S Pakiaraja, Spokesperson, NTK, on October 20, 2022

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular