திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024
திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

HomeFact Checkஇந்தியாவின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்த மன்மோகன் சிங் போன்ற பிரதமர் தேவை என்றாரா ரிஷி சுனக்?

இந்தியாவின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்த மன்மோகன் சிங் போன்ற பிரதமர் தேவை என்றாரா ரிஷி சுனக்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இந்தியாவின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்த மன்மோகன் சிங் போன்ற பிரதமர் தேவை என்று ரிஷி சுனக் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்தியாவின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்த மன்மோகன் சிங் போன்ற பிரதமர் தேவை என்று ரிஷி சுனக் கூறியதாக பரவும் தகவல்

இங்கிலாந்தின் புதிய பிரதமராக ரிஷி சுனக் என்பவர் பொறுப்பேற்கவுள்ளார். இவர் இந்திய வம்சாளியை சார்ந்தவர் என்று நெட்டிசன்கள் பூரித்து கொண்டிருக்கும் நிலையில், ‘பலவீனமான வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்த, இந்தியாவுக்கு சரியான திசையையும் நிலைமையும் வழங்க மன்மோகன் சிங் போன்ற பிரதமர் தேவை’ என்று ரிஷி சுனக் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது

இந்தியாவின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்த மன்மோகன் சிங் போன்ற பிரதமர் தேவை என்று ரிஷி சுனக் கூறியதாக பரவும் தகவல் - 01
Screenshot from Twitter @Gowdam80753472
இந்தியாவின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்த மன்மோகன் சிங் போன்ற பிரதமர் தேவை என்று ரிஷி சுனக் கூறியதாக பரவும் தகவல் - 02
Screenshot from Facebook / Wilma Selva
இந்தியாவின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்த மன்மோகன் சிங் போன்ற பிரதமர் தேவை என்று ரிஷி சுனக் கூறியதாக பரவும் தகவல் - 03
Screenshot from Facebook / subbu.ram.714

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: குரூப் 2 விடைத்தாள்கள் தண்ணீரில் நனைந்து விட்டதா?

Fact Check/Verification

இந்தியாவின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்த மன்மோகன் சிங் போன்ற பிரதமர் தேவை என்று ரிஷி சுனக் கூறியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து, இவ்வாறு ஒரு தகவலை அவர் கூறினாரா என்று பொது ஊடகங்களில் தேடினோம். இதில் மேற்கண்ட தகவலை ரிஷி சுனக் கூறியதாக எந்த ஒரு ஊடகத்திலும் செய்தி வந்ததற்கான தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, ரிஷி சுனக்கின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். அவற்றிலும் மன்மோகன் சிங் குறித்து ரிஷி சுனக் பதிவிட்டதற்கான எந்த தரவுகள் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து உற்று நோக்கியதில் வைரலாகும் பதிவுகளில் டேனிக் பாஸ்கர் எனும் இந்தி ஊடகத்தின் லோகோ இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. தொடர்ந்து தேடியதில், வைரலாகும் இதே தகவல் இதே லோகோவுடன் இந்தி மொழியிலும் வைரலாவதை காண முடிந்தது.

இதனையடுத்து டேனிக் பாஸ்கர் இவ்வாறு ஒரு செய்தி வெளியிட்டதா என்பதை தேடினோம். இத்தேடலில் வைரலாகும் இதே படங்களுடன் டேனிக் பாஸ்கர் டிவீட் ஒன்றை செய்திருந்ததை காண முடிந்தது. ஆனால் இப்படங்களுடன் இடம்பெற்றிருந்த எழுத்து பகுதியில் இருந்த தகவலானது, வைரலாகும் தகவலிலிருந்து முழுமையாக வேறுபட்டிருந்தது.

இந்தியாவிலும் சிறுபான்மையினர் பிரதமராக வேண்டும் என்கிற சசி தரூர் மற்றும் பா.சிதம்பரத்தின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், மன்மோகன் சிங்கை மறந்துவிட்டீர்களா என்று பாஜக கேள்வி எழுப்பியதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்று இந்தியாவிலும் சிறுபான்மையினர் உயர் பதவிகளுக்கு வர வேண்டும் என்று பா. சிதம்பரமும் சசி தரூரும் பேசி இருந்தனர். இதற்கு பாஜக பதிலளித்திருந்தது. இதனை டேனிக் பாஸ்கர் செய்தியாக வெளியிட்டிருந்ததுடன், இதுக்குறித்து டிவீட்டும் செய்திருந்தது. இந்த டிவீட்டை எடிட் செய்தே மேற்கண்ட தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.

டேனிக் பாஸ்கரின் எடிட்டர் LP பாண்டை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு இத்தகவல் குறித்து விசாரித்ததில், இவ்வாறு ஒரு செய்தியை நாங்கள் வெளியிடவில்லை. வைரலாகும் படத்தில் காணப்படும் தகவல் முற்றிலும் போலியானது என்று அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ரிஷி சுனக் தரப்பை தொடர்புக் கொண்டு இததகவல் குறித்து கேட்ட்டிருந்தோம். அவர்கள் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை வரவில்லை. பதில் வரும் பட்சத்தில், அதையும் இச்செய்தியில் தெரிவிப்போம் என்று கூறிக் கொள்கின்றோம்.

Also Read: ஜெயலலிதா காலில் ப.சிதம்பரம் விழுந்தாரா?

Conclusion

இந்தியாவின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்த மன்மோகன் சிங் போன்ற பிரதமர் தேவை என்று ரிஷி சுனக் கூறியதாக பரவும் தகவல் தவறானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

(இச்செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் இந்தியில் பிரசுரமாகியுள்ளது)

Result:  Altered Photo

Sources

Tweet of Dainik Bhaskar, posted on October 25, 2022
Quote of LP Pant, National Editor, Dainik Bhasker


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular