Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
மேற்கு வங்க அமைச்சர் ஒருவருடையை டிரைவரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று குறிப்பிட்டு படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
“மம்தா பேகம் அடங்கிப் போவதன் மர்மம் ஒவ்வொன்றாக வெளி வருகிறது. இது ஒரு மந்திரியோட கார் டிரைவர் வீட்டுல பீரோ! டிரைவர் வீட்டு பீரோவே இப்படினா அப்போ ஓனர்?” என்று குறிப்பிட்டு ஒரு அலமாரி முழுவதும் பணக்கட்டுகள் நிரம்பியுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தீபாவளிக்கு ₹600 கோடி மது விற்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதா?
Fact Check/Verification
மேற்கு வங்க அமைச்சர் ஒருவருடையை டிரைவரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று குறிப்பிட்டு படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ச் சர்ச் முறைக்கு உட்படுத்தி இதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் வைரலாகும் படம் ஐதரபாத்தில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. ஐதரபாத்தை சார்ந்த மருந்து நிறுவனம் ஒன்றில் கணக்கில் காட்டப்படாத 142,87 கோடி ரூபாயை கடந்த வருடம் அக்டோபரில் வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அத்தருணத்தில் எடுக்கப்பட்ட படமே மேற்கு வங்கத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகி வருகின்றது.
இந்நிகழ்வு குறித்து ஊடகங்களில் வந்த செய்தியை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இதனையடுத்து மேற்கு வங்கத்தில் அமைச்சர் யாரேனும் வீட்டில் சோதனை ஏதும் சமீபத்தில் நடந்ததா என ஆராய்ந்தோம். இதில் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான மாணிக் பட்டாச்சார்யா என்பவருக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் அமலாக்கத் துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தியது தெரிய வந்தது.
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்ததாகவும், இதில் மாணிக் பட்டாச்சார்யாவுக்கு தொடர்புள்ளதாகவும் கூறி அமலாக்கத் துறையினர் மாணிக் பட்டாச்சார்யாவை கைது செய்துள்ளதையும் அறிய முடிந்தது.
இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த ஜூலை மாதம் கட்டுக்கட்டாக பணங்களை கைப்பற்றியுள்ளனர். இதுக்குறித்து அவர்களது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ளனர்.
இதனடிப்படையில் காண்கையில் மேற்கு வங்கத்தில் பணம் கைப்பற்றபட்டதும், இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸை சார்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதும் உண்மை என்பதை அறிய முடிகின்றது. ஆனால் வைரலாகும் படத்திற்கும் மேற்கு வங்க சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதும் தெளிவாகின்றது.
Also Read: ஆவின் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி பயன்படுத்தப்படுகின்றதா?
Conclusion
மேற்கு வங்க அமைச்சர் ஒருவருடையை டிரைவரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று குறிப்பிட்டு வைரலாகும் படம் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Partly False
Sources
Article, from Timesnownews on October 13, 2021
Article, from zeenews.india.com on October 11, 2021
Article, from India.com on October 11, 2021
Article, from thenewsminute on October 10, 2021
Article, from frontline.thehindu.com on October 15, 2022
Youtube Video, from Republic World on October 15, 2022
Tweet, from Enforcement Directorate (ED) on July 22, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.