Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim : சுவாமி விவேகானந்தரின் அரிதான வீடியோ
Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படுபவர் பரமஹன்ஸ யோகானந்தா ஆவார்
“அதிசயம் ஆனால் உண்மை நாம் யாரும் விவேகானந்தரை சரியான கோணத்தில் பார்த்திருக்க மாட்டோம் இப்பொழுது பாருங்கள் விவேகானந்தரை” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Factcheck / Verification
சுவாமி விவேகானந்தரின் அரிதான வீடியோ என்று கூறி வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, இவ்வீடியோவை ஒவ்வொரு கீஃபிரேம்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் Universal Yogodans எனும் யூடியூப் சேனலில் நவம்பர் 5, 2016 அன்று Sri Sri Paramahansa Yogananda ji – During his Early years in America (சிறுவயதில் பரமஹன்ஸ யோகானந்தா அமெரிக்காவில்) என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோவில் முழுப்பகுதி பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் பரமஹன்ஸா யோகானந்தா பெயரில் இயங்கும் ஃபேஸ்புக் பக்கத்தில் மார்ச் 6, 2023 அன்று வைரலாகும் இதே வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது. அந்த வீடியோவின் கேப்ஷனில் “Yogananda in New York… this original video footage of Swami Yogananda visiting New York in 1923 (1923 ஆம் ஆண்டு யோகானந்தா நியூயார்க் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ)“ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இந்த பதிவில் “collaboration with the University of South Carolina” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. கூடுதலாக, mirc@sc.edu என்ற வாட்டர்மார்க் இருப்பதையும் காண முடிந்தது.
இவற்றை அடிப்படையாக சவுத் கரோலினா பல்கலை கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தேடலை தொடர்ந்தோம். இதில் ‘Swami Yogananda of India–outtakes’ என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோவில் முழுப்பகுதி அந்த இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிடிருப்பதை காண முடிந்தது.
அந்த வீடியோவின் டிஸ்கிரிப்ஷனில் “The Swami and his party walking along Pershing Square in New York, possibly during a 1923 visit to the city (யோகானந்தா அவர் சீடர்களுடன் நியூயார்க் நகருக்கு 1923 ஆம் ஆண்டு வந்தபோது எடுக்கப்பட்டது)” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நபர் விவேகானந்தர் அல்ல, பரமஹம்ஸ யோகானந்தா என தெளிவாகின்றது.
Also Read: Fact Check: ராகுல் காந்தி போதைப் பொருள் வழக்கில் 2001-ல் கைது செய்யப்பட்டாரா?
Conclusion
சுவாமி விவேகானந்தரின் அரிதான வீடியோ என்று வைரலாகும் வீடியோவில் காணப்படுபவர் விவேகானந்தர் அல்ல. இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
YouTube Video By Universal Yogodans, Dated November 5, 2016
Facebook Post By @yogananda, Dated March 6, 2023
Official Website Of University of South Carolina
(இச்செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.