Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim : சிவம் துபே அடித்த சிக்ஸரில் சிதறிய கண்ணாடி
Fact: வைரலாகும் புகைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
சிஎஸ்கே அணி வீரர் சிவம் துபே சிக்ஸரில் சிதறிய கண்ணாடி என்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
News 18 தமிழ்நாடு, சிவம் துபே அடித்த 111 மீட்டர் “சிக்ஸரில் சிதறிய கண்ணாடி” என்று புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: எடப்பாடியாராக மாறிய கிங் கோலி என்று பரவும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்ட்!
Factcheck / Verification
சிஎஸ்கே சிவம் துபே சிக்ஸரில் சிதறிய கண்ணாடி என்று News 18 தமிழ் பகிர்ந்த புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாடும் கிரிக்கெட் வீரர் சிவம் துபே, நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான மேட்ச்சில் 111 மீட்டர் உயர சிக்ஸ் ஒன்றை அடித்திருந்தார்.
இந்நிலையில், இச்செய்தியை பதிவிட்டுள்ள News 18 தமிழ்நாடு, அதில் கடந்த 2022ஆம் ஆண்டு சிவம் துபே, தான் உடைத்த கண்ணாடியுடன் காட்சி தரும் புகைப்படத்தை உபயோகித்து, நேற்றைய போட்டியில் 111 மீட்டர் சிக்ஸரில் சிவம் துபே உடைத்த கண்ணாடி என்று பகிர்ந்துள்ளது.
CSK அணியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இப்புகைப்படம் கடந்த மார்ச் 2022ல் பகிரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட புகைப்படமே நேற்று சிவம் துபே அடித்த 111 மீட்டர் பந்தில் உடைந்த கண்ணாடி என்று பரவுகிறது.
Also Read: Fact Check: உத்திரகோசமங்கை மரகத நடராஜர் கதிர்வீச்சால் அபிஷேக பாலின் நிறம் மாறியதா?
Conclusion
சிஎஸ்கே சிவம் துபே சிக்ஸரில் சிதறிய கண்ணாடி என்று News 18 தமிழ் பகிர்ந்த புகைப்படம் 2022ஆம் ஆண்டு புகைப்படம் என்பது கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகிறது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Facebook Post From, Chennai Super Kings, Dated March 12, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.