Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: மிட்செல் மார்ஷ் காலுக்கு கீழ் நேராக நியூஸ்கார்டில் பிரதமர் மோடி புகைப்படத்தை உபயோகித்த சன் நியூஸ்
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது. உண்மையான நியூஸ்கார்டில் ஆஸ்திரேலிய கேப்டன் புகைப்படமே இடம்பெற்றுள்ளது.
மிட்செல் மார்ஷ் காலுக்கு கீழ் நேராக நியூஸ்கார்டில் பிரதமர் மோடி புகைப்படத்தை உபயோகித்த சன் நியூஸ் என்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அயோத்தி அடிக்கல் நாள் அன்று கருப்பாடை அணிந்த காங்கிரஸ் எம்பிக்கள் எனப் பரவும் தவறான புகைப்படம்!
Fact Check/Verification
மிட்செல் மார்ஷ் காலுக்கு கீழ் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பதிவிட்ட சன் நியூஸ் என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து ஆராய்ந்தபோது சன் நியூஸ் வெளியிட்டிருந்த ஒரிஜினல் நியூஸ்கார்டில் உலகக்கோப்பை போட்டியை குறிக்கும் வகையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கேப்டன்களின் புகைப்படம் உலகக்கோப்பை குறித்த எல்லா நியூஸ்கார்டுகளிலும் இடம்பெற்றிருந்தது.
அதில், ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் புகைப்படம் இடம்பெற்றிருந்த இடத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை எடிட் செய்து வைத்துள்ளனர் என்பது நமக்கு உறுதியானது.
இதுகுறித்து, சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் மனோஜிடம் கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது; நாங்கள் பிரதமரின் புகைப்படத்தை பயன்படுத்தவில்லை” என்று விளக்கமளித்தார்.
Also Read: மாற்றுத்திறனாளிகளுக்கு 40 ஆயிரம் மதிப்புள்ள வீல்சேரை இலவசமாக தருகின்றதா மத்திய அரசு?
Conclusion
மிட்செல் மார்ஷ் காலுக்கு கீழ் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பதிவிட்ட சன் நியூஸ் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
Facebook Post From, Sun news Tamil, Dated November 19, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.