Fact Check
ஸ்டாலினிடம் ₹200 படிக்காசு பெற்றுக்கொண்டேன் என்றாரா வன்னி அரசு?
Claim: ஸ்டாலினிடம் ₹200 படிக்காசு பெற்றுக்கொண்டேன் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் வன்னி அரசு.
Fact: வைரலாகும் டிவீட் வன்னி அரசு பெயரில் இயங்கும் போலிக் கணக்கில் பதிவிடப்பட்டதாகும்.
“இன்று எனக்கு தாலாட்டு நாள்..! தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றதுடன்..காலை உணவும், படிக்காசு ₹200 ம் பெற்றுக்கொண்டேன்” என்று விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு டிவீட் செய்ததாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

