ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkஅண்ணாமலை பாஜகவிலிருந்து ராஜினாமா செய்கிறாரா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து ராஜினாமா செய்கிறாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: அண்ணாமலை பாஜகவிலிருந்து ராஜினாமா செய்கிறார்.

Fact: வைரலாகும் இத்தகவல் தவறானது என்று பாஜக தரப்பும் புதிய தலைமுறையும் உறுதி செய்துள்ளது.

“அண்ணா அவர்கள் குறித்து அண்ணாமலை பேசிய கருத்தால் கூட்டணி இல்லை என்று அறிவித்த அதிமுக, மத்திய பாஜக அழுத்தத்தின் காரணமாக நாளை தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை ராஜினாமா செய்ய போவதாக தகவல்” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்த கார்டை முன்னாள் பாஜக உறுப்பினரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் உட்பட பலர் பகிர்ந்து வருகின்றனர்.

அண்ணாமலையை பாஜகவிலிருந்து ராஜினாமா செய்யவிருப்பதாக பரவும் தகவல்

X Link | Archived Link

அண்ணாமலையை பாஜகவிலிருந்து ராஜினாமா செய்யவிருப்பதாக பரவும் தகவல்

Facebook Link

அண்ணாமலையை பாஜகவிலிருந்து ராஜினாமா செய்யவிருப்பதாக பரவும் தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நீண்ட நேரம் டையப்பர் அணிவித்ததால் புற்றுநோய் ஏற்பட்டு குழந்தை இறந்ததாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Fact Check/Verification

அண்ணாமலை பாஜகவிலிருந்து ராஜினாமா செய்யவிருப்பதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது” என்று பதிலளித்தார்.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் புதிய தலைமுறை இவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை.

இதனையடுத்து தந்தி புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.

தொடர்ந்து இந்த நியூஸ்கார்டு போலியானது என குறிப்பிட்டு படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.

அண்ணாமலையை பாஜகவிலிருந்து ராஜினாமா செய்யவிருப்பதாக பரவும் தகவல்

Also Read: மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருவில் உறங்குவதாக பரவும் தவறான வீடியோ!

Conclusion

அண்ணாமலை பாஜகவிலிருந்து ராஜினாமா செய்யவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone conversation with S.G.Suryah, State Secretary, Tamilnadu BJP
Phone conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular