திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkடாடா மோட்டார்ஸ் கார் பரிசளிப்பதாக பரவும் போலி வாட்ஸ்ஆப் தகவல்!

டாடா மோட்டார்ஸ் கார் பரிசளிப்பதாக பரவும் போலி வாட்ஸ்ஆப் தகவல்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: 15 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் கார் பரிசளிக்கின்றது.

Fact: இத்தகவல் தவறானது என்று டாடா மோட்டார்ஸ் தெளிவு செய்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 15 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கார் பரிசளிப்பதாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

15 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் கார் பரிசளிப்பதாக பரவும் தகவல்
Screenshot from Twitter@sunnewstamil

இத்தகவலை நியூஸ்செக்கரின் டிப்லைன் எண்ணான 9999499044 எனும் எண்ணிற்கு அனுப்பி இதுக்குறித்த உண்மையை வாசகர் ஒருவர்கேட்டிருந்தார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மணிப்பூரில் சுட்டுக்கொல்லப்படும் பெண்கள் என்று பரவும் மியான்மர் வீடியோ!

Fact Check/Verification

15 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் கார் பரிசளிப்பதாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில் இத்தகவல் தவறானது என்பதும், சைபர் திருட்டுக்காக இத்தகவல் பரப்பப்படுகின்றது என்பதும் நமக்கு தெரிய வந்தது. சேலம் மற்றும் மயிலாடுதுறை போலீசாரின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கங்களில் இதுக்குறித்த எச்சரிக்கை பதிவு பதிவிடப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

மேலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது 1945 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது, ஆனால் வைரலாகும் இத்தகவலிலோ 15 ஆம் ஆண்டு விழா என்று கூறப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.

தொடர்ந்து தேடுகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமே இத்தகவல் பொய்யானது என்று தெளிவுப்படுத்தி டிவீட் செய்திருப்பதை நம்மால் காண முடிகின்றது.

Also Read: செங்கோலில் பெரியார் முகம் பொறித்திருந்ததால் வாங்க மறுத்தாரா சித்தராமையா?

Conclusion

15 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் கார் பரிசளிப்பதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook Post from Salem District Police, Dated June 16, 2023

Facebook Post from Mayiladuthurai District Police, Dated June 16, 2023
TATA Motor’s reply tweet

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular