சனிக்கிழமை, ஜூன் 15, 2024
சனிக்கிழமை, ஜூன் 15, 2024

HomeFact Checkவேளாண் மசோதாக்களை எதிர்த்து கூடிய கூட்டமா இது?

வேளாண் மசோதாக்களை எதிர்த்து கூடிய கூட்டமா இது?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

நாடாளுமன்றத்தில் புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு – வீரவிளையாட்டு எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் “விவசாயிகளின் போராட்டம் மறைக்கப்படுவது ஏன்? ஜனநாயகம் உயிர்த்தெழட்டும்.” எனத் தலைப்பிட்டு, ஒரு மாபெரும் கூட்டம் போராடுவதுபோல் போன்ற ஒரு படம் பகிரப்பட்டுள்ளது.

https://www.facebook.com/jallikattua2z/photos/a.843786535633454/3642304035781676/

Fact Check/Verification

இந்தியா முழுவதும் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களை எதிர்த்து மபெரும் போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. குறிப்பாக ஹரியானா, குஜராத் போன்ற  மாநிலங்களில் இப்போராட்டம் மிகக் கடுமையாக நடைப்பெற்று வருகிறது.

ஆனால் ஜல்லிக்கட்டு- வீரவிளையாட்டு எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தப் புகைப்படம் நிஜமாகவே புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை எதிர்த்து நடைபெறும் போராட்டம்தானா என்ற சந்தேகம் நமக்குள்  ஏற்பட்டது.

ஆகவே நம் சந்தேகத்தை சரிசெய்ய பகிரப்பட்டப் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்தோம்.

இவ்வாறு ஆராய்ந்தபோது இதன் பின்னணியில் இருந்த உண்மையை  நம்மால் அறிய முடிந்தது.

உண்மை என்ன?

உண்மையில், ஜல்லிக்கட்டு- வீரவிளையாட்டு ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள போராட்டமானது, புதிய வேளாண் மசோதாக்களை எதிர்த்து தற்போது நடைபெறும் போராட்டத்தின் புகைப்படமல்ல.

இப்புகைப்படமானது 2018 ஆம் ஆண்டு நடைப்பெற்ற விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டப் புகைப்படமாகும்.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் மீதுள்ள வங்கிக் கடன்கள் மற்றும் மின்சாரக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளுடன் நாசிக்கிலிருந்து மும்பைக்கு நடைப்பயணமாக சென்றனர்.

இப்போராட்டம் குறித்து ரிப்பப்ளிக் டிவியில் வந்தச் செய்தி:

COURTESY: REPUBLIC TV

மும்பை லைவ் தனது அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தது.

மும்பை லைவ் டிவிட்டர் பதிவு.

அப்புகைப்படங்களில் ஜல்லிக்கட்டு – வீரவிளையாட்டு ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டப் புகைப்படமும் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது.

வாசகர்களின்  புரிதலுக்காக ஜல்லிக்கட்டு – வீரவிளையாட்டு ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட புகைப்படத்தையும்,  மும்பை லைவ் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டப் புகைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Conclusion

நம் விரிவான ஆய்வுக்குபின் ஜல்லிக்கட்டு – வீரவிளையாட்டு ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட புகைப்படமானது, வேளாண் மசோதாக்களை எதிர்த்து சமீபத்தில் நடைபெறும் போராட்டத்தில் எடுக்கப்பட்டதல்ல என்பதும், அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாசிக்கிலிருந்து மும்பைக்கு விவசாயிகள் நடைப்பயணப் போராட்டம் செய்தபோது எடுக்கப்பட்டது என்பதும் தெளிவாகியுள்ளது.

Result: Misleading


Our Sources

Facebook Page: https://www.facebook.com/jallikattua2z/photos/a.843786535633454/3642304035781676/

Mumbai Live: https://twitter.com/MumbaiLiveNews/status/972515680414289920

Republic TV: https://www.youtube.com/watch?v=dmbbQ1xh8_A


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular