ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஹரியானா பாஜக வேட்பாளரை பொதுமக்கள் கல்லால் அடித்து விரட்டினரா?

ஹரியானா பாஜக வேட்பாளரை பொதுமக்கள் கல்லால் அடித்து விரட்டினரா?

Authors

Vasudha noticed the growing problem of mis/disinformation online after studying New Media at ACJ in Chennai and became interested in separating facts from fiction. She is interested in learning how global issues affect individuals on a micro level. Before joining Newschecker’s English team, she was working with Latestly.

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ஹரியானா பாஜக வேட்பாளரை பொதுமக்கள் கல்லால் அடித்து விரட்டினர்.

Fact: இத்தகவல் தவறானதாகும். 2021 ஆம் ஆண்டில் ஹரியானா துணை சபாநாயகர் தாக்கப்பட்ட வீடியோவை வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது.

“தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த ஹரியானா பாஜக வேட்பாளர் கல்லால் அடித்து ஓட ஓட விரட்டிய பொது மக்கள்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஹரியானா பாஜக வேட்பாளரை பொதுமக்கள் கல்லால் அடித்து விரட்டியதாக பரப்பப்படும் தகவல்

X Link | Archive Link

ஹரியானா பாஜக வேட்பாளரை பொதுமக்கள் கல்லால் அடித்து விரட்டியதாக பரப்பப்படும் தகவல்

Facebook Link

ஹரியானா பாஜக வேட்பாளரை பொதுமக்கள் கல்லால் அடித்து விரட்டியதாக பரப்பப்படும் தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

Fact Check/Verification

ஹரியானா பாஜக வேட்பாளரை பொதுமக்கள் கல்லால் அடித்து விரட்டியதாக பரப்பப்படும் வீடியோவில் “பாரத் நியூஸ்”, “PB நியூஸ்” எனும் வார்த்தைகளை இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

ஹரியானா பாஜக வேட்பாளரை பொதுமக்கள் கல்லால் அடித்து விரட்டியதாக பரப்பப்படும் தகவல்

இதை அடிப்படையாக வைத்து தேடியதில் Pahredar Bharat News எனும் யூடியூப் சேனலில் வைரலாகும் இவ்வீடியோவின் முழுநீளப் பகுதி ஜூலை 11, 2021 அன்று பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. சிர்ஸா பகுதியில் துணை சபாநாயகர் ரன்பீர் கங்வா விவசாயிகளால் தாக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹரியானா பாஜக வேட்பாளரை பொதுமக்கள் கல்லால் அடித்து விரட்டியதாக பரப்பப்படும் தகவல்

பஞ்சாப் கேசர் ஹரியனா எனும் யூடியூப் பக்கத்திலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

ஹரியானா பாஜக வேட்பாளரை பொதுமக்கள் கல்லால் அடித்து விரட்டியதாக பரப்பப்படும் தகவல்

தொடர்ந்து தேடுகையில் சிர்ஸா பகுதியில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு திரும்புகையில் ரன்பீர் கங்வா தாக்கப்பட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. மேலும் இச்செய்தியில் விவசாயிகள் பாஜக தலைவர்ளை எதிர்த்து ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி அம்பாலா, ஜாஜ்ஜர், ஃபடீஹாபாத் உள்ளிட்ட பகுதியில் போரட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹரியானா பாஜக வேட்பாளரை பொதுமக்கள் கல்லால் அடித்து விரட்டியதாக பரப்பப்படும் தகவல்

இச்சம்பவம் குறித்து மேலும் சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில்  தெளிவாகுவது யாதெனில்,

  1. வைரலாகும்  வீடியோவில் காணப்படும் சம்பவம் சமீபத்தில் நடந்தது அல்ல; 2021 ஆம் ஆண்டில் நடந்த பழைய சம்பவமாகும்.
  2. வைரலாகும் சம்பவத்திற்கும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அச்சம்பவம் 2021 ஆம் ஆண்டில் நடந்த வேளாண் போராட்டத்திற்கு தொடர்புடையதாகும்.
  3. வைரலாகும் வீடியோவில் தாக்கப்படுபவர் வேட்பாளர் அல்ல; அவர் ஹரியானாவின் துணை சபாநாயகர் ஆவார்.

 Also Read: அம்பத்தூர் தொழிற்பேட்டையை விட அயோத்தி ராமர் கோவிலில் அதிக வருமானம் வருகின்றது என்றாரா நிர்மலா சீதாராமன்?

Conclusion

ஹரியானா பாஜக வேட்பாளரை பொதுமக்கள் கல்லால் அடித்து விரட்டியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

இச்செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.

Result: False

Our Sources
YouTube Video By Pahredar Bharat News, Dated July 11, 2021
YouTube Video By Punjab Kesari Haryana, Dated July 11, 2021
Report By India Today, Dated July 11, 2021

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Most Popular