ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Check‘தற்காலிக ஓட்டுநர் அட்ராசிட்டிஸ்’ என்று பரவும் பழைய வீடியோ!

‘தற்காலிக ஓட்டுநர் அட்ராசிட்டிஸ்’ என்று பரவும் பழைய வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ‘தற்காலிக ஓட்டுநர் அட்ராசிட்டிஸ்’ என்று பரவும் வீடியோ

Fact: வைரலாகும் வீடியோ 2019 ஆண்டின் பழைய வீடியோவாகும்.

தமிழகத்தில் போக்குவரத்து துறை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். நிலைமையை சமாளிக்க தற்காலிக ஓட்டுநர்களை பணியமர்த்தி பேருந்துகளை இயக்கி வருகின்றது தமிழக அரசு.

இந்நிலையில் தற்காலிக ஓட்டுநர் அட்ராசிட்டிஸ் என்று குறிப்பிட்டு தற்காலிக ஓட்டுநர்கள் விபத்தை ஏற்படுத்தியதாக வீடியோ ஒன்றை அதிமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

தற்காலிக ஓட்டுநர் அட்ராசிட்டிஸ் என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோ

X Link | Archived Link

தற்காலிக ஓட்டுநர் அட்ராசிட்டிஸ் என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோ

Archived Link

தற்காலிக ஓட்டுநர் அட்ராசிட்டிஸ் என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோ

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழகத்தில் தற்காலிக ஓட்டுநர்கள் செலுத்தும் பேருந்துகள் நிலை என 2018ஆம் ஆண்டு புகைப்படத்தை பரப்பும் அதிமுகவினர்!

Fact Check/Verification

‘தற்காலிக ஓட்டுநர் அட்ராசிட்டிஸ்’ என்று குறிப்பிட்டு வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாகப் பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.

இதில், “வண்டிகளுக்கு இடையே போதிய இடைவெளி விட்டு சென்றால் அடுத்தடுத்த 6 பேருந்துகள் இப்படி மோதி கொள்ளாது. இந்த சம்பவம் தஞ்சாவூரில் நடைபெற்றது. போன வாரம் அரூரிலும் 3 வண்டிகள் இப்படி மோதிக் கொண்டன. பள்ளி பேருந்து, மினிடோர், லாரி. வாகனங்கள் 15 மீட்டர் இடைவெளி விட்டு இயக்கவும் நன்றி” என்று குறிப்பிட்டு ‘அழகு அரூர்’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் நவம்பர் 24, 2019 அன்று இதே வீடியோவானது பதிவிடப்பட்டிருப்பதை காண முடிகின்றது.

தற்காலிக ஓட்டுநர் அட்ராசிட்டிஸ் என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோ

இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் இவ்வீடியோவில் காணப்படும் விபத்தானது 2019 ஆம் ஆண்டோ அல்லது அதற்கு முன்னரோ நிகழ்ந்திருக்கலாம் என தெளிவாகின்றது.  ஆகவே தற்போதைய நிலைக்கும் வைரலாகும் இவ்வீடியோவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உறுதியாகின்றது.

Also Read: புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து லாரி டிரைவர்கள் நிர்வாண போராட்டம் நடத்தினரா?

Conclusion

‘தற்காலிக ஓட்டுநர் அட்ராசிட்டிஸ்’ என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோவானது 2019 ஆண்டின் பழைய வீடியோவாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் தெளிவுப்படுத்தியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Facebook Post from Azhagu Harur, Dated November 24, 2019

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular