செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024

HomeFact Checkஇந்திய ஐஏஎஸ் அதிகாரி விஜய் சிங் கிளாஸ்கோவில் பேசிய உரை என்று பரவும் தவறான வீடியோ...

இந்திய ஐஏஎஸ் அதிகாரி விஜய் சிங் கிளாஸ்கோவில் பேசிய உரை என்று பரவும் தவறான வீடியோ தகவல்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

இந்திய ஐஏஎஸ் அதிகாரி விஜய் சிங், கிளாஸ்கோவில் காலநிலை மாற்றம் குறித்து பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

“கிளாஸ்கோவில் சர்வதேச மேடையில் இந்திய அதிகாரியின் துணிச்சலைப் பாருங்கள். விஜய் சிங் ஐஏஎஸ் அவர்களுக்கு வணக்கம். அருமையான பேச்சு, ஒவ்வொரு இந்தியனும் ஒருமுறை கேட்க வேண்டும்” என்பதாக இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from Facebook/elifedream

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தாய்லாந்தில் ‘ஓம்’ என்ற வார்த்தையை உச்சரித்தால் மலையை விட உயரத்தில் பறக்கும் நீருற்று; வைரலாலும் வீடியோவின் உண்மை என்ன?

Fact Check / Verification

இந்திய ஐஏஎஸ் அதிகாரி விஜய் சிங், கிளாஸ்கோவில் காலநிலை மாற்றம் குறித்து பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட வீடியோவின் கீ-ப்ரேம்களை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது COP26 Coalition கடந்த நவம்பர் 10, 2021 அன்று ஷேர் செய்திருந்த இந்த மாநாட்டின் வீடியோ நமக்கு கிடைத்தது. அதில், குறிப்பிட்ட வீடியோவில் பேசும் நபர் “விஜய் பிரசாத்” என்றும், அவர் Tricontinental: Institute of social Research இயக்குனர் மற்றும் பத்திரிக்கையாளர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ClimateJusticeUK இணையதளப் பக்கத்திலும் இந்த மாநாட்டின் வீடியோ ஷேர் செய்யப்பட்டுள்ளது.

மேலும், வீடியோவில் பேசும் விஜய் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஜனவரி 28, 2022ல், “This video of me from Glasgow has gone so viral in Indian right-wing WhatsApp groups that I am hearing from people I have not heard from in over thirty years” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: ஈராக்கில் அமைந்துள்ள ராமர்-அனுமன் சிற்பம் என்று பரவும் புகைப்படத்தின் பின்னணி என்ன?

Conclusion

இந்திய ஐஏஎஸ் அதிகாரி விஜய் சிங், கிளாஸ்கோவில் காலநிலை மாற்றம் குறித்து பேசியதாக பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Sources
Twitter Post From, Vijay Prashad, Dated January 29, 2022
Website Report From, ClimateJustice.uk
YouTube Video From, COP26 Coalition, Dated November 10, 2021

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular