வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact CheckFact check: 2016 சட்டமன்றத் தேர்தலில் சீமான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சைமன் என்று...

Fact check: 2016 சட்டமன்றத் தேர்தலில் சீமான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சைமன் என்று கையொப்பமிட்டாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சைமன் என்று கையொப்பமிட்டார் சீமான்

Fact: வைரலாகும் பிரமாணப் பத்திரம் எடிட் செய்யப்பட்டதாகும்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார்.

இத்தேர்தலில் போட்டியிட சீமான் சமர்ப்பித்த  பிரமாணப் பத்திரத்தில் தன்னுடைய பெயரை ‘சைமன்’ என்றும், தந்தையின் பெயரை ‘செபஸ்டியன்’ என்றும் குறிப்பிட்டதுடன், சைமன் என்று கையெழுத்திட்டதாக பிரமாணப் பத்திரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

 2016 சட்டமன்றத் தேர்தலில் சீமான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சைமன் என்று கையொப்பமிட்டதாக பரவும் தகவல்
Screengrab from Twitter@FriendsOfVck
 2016 சட்டமன்றத் தேர்தலில் சீமான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சைமன் என்று கையொப்பமிட்டதாக பரவும் தகவல்
Screengrab from Facebook/laksmana.murali
 2016 சட்டமன்றத் தேர்தலில் சீமான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சைமன் என்று கையொப்பமிட்டதாக பரவும் தகவல்
Screengrab from Facebook/Nilexon

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரையில் அமர வைத்தாரா?

Factcheck / Verification

2016 சட்டமன்றத் தேர்தலில் சீமான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சைமன் என்று கையொப்பமிட்டதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் சீமான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் 2016 ஆம் ஆண்டு சீமான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை நம்மால் கண்டறிய முடிந்தது. இதனையடுத்து அப்பத்திரத்தை ஆய்வு செய்ததில்,  சீமான் தன்னுடைய பெயரை ‘சீமான்’ என்றே குறிப்பிட்டிருப்பதையும், அவரின் தந்தை பெயரை ‘செந்தமிழன்’ என்று குறிப்பிட்டிருப்பதையும் காண முடிந்தது. மேலும் சீமான் என்றே அவர் கையொப்பமிட்டிருபதையும் காண முடிந்தது.

 2016 சட்டமன்றத் தேர்தலில் சீமான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சைமன் என்று கையொப்பமிட்டதாக பரவும் தகவல்

முழுமையான பிரமாணப் பத்திரத்தை இங்கே காண்க

இதன் அடிப்படையில் காண்கையில் சீமான் சைமன் என்று கையொப்பமிட்டாதாக சமூக வலைத்தளங்களில் பரவும் பிரமாணப் பத்திரம் எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகின்றது.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான பத்திரத்தையும், எடிட் செய்யப்பட்ட பத்திரத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: Fact Check: சீனாவில் புழு மழை பெய்ததாகப் பரவிய வீடியோ தகவல் உண்மையா?

Conclusion

2016 சட்டமன்றத் தேர்தலில் சீமான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சைமன் என்று கையொப்பமிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered photo

Our Sources

Election Commission website

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular