Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

‘நான் வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’ என்று அண்ணாமலைக்கு கிண்டலாக பதிலளித்தாரா ரவீந்திர ஜடேஜா?
‘நான் வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’ என்று அண்ணாமலைக்கு ரவீந்திர ஜடேஜா கிண்டலாக பதிலளித்தாக பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைப்பதை விட திப்பு சுல்தானின் வாளை வைப்பதே சிறப்பானது என்றாரா சுகி.சிவம்?
புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைப்பதை விட திப்பு சுல்தானின் வாளை வைப்பதே சிறப்பானது என்று சுகி.சிவம் கூறியதாக பரவும் தகவல் பொய்யானதாகும்.

சீமானுக்கும் சிஎஸ்கே அணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதன் CEO காசி விஸ்வநாதன் அறிக்கை வெளியிட்டாரா?
சீமானுக்கும் சிஎஸ்கே அணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதன் CEO காசி விஸ்வநாதன் அறிக்கை வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.

சென்னை அணிக்காக அகமதாபாத்தில் கூடிய ரசிகர்கள் என்று பரவும் தவறான படங்கள்!
சென்னை அணிக்காக அகமதாபாத்தில் ரசிகர்கள் கூடியதாக வைரலாகும் படங்கள் தவறானவையாகும்.

கல்வி உரிமை போன்று எதற்கும் உதவாததற்கு தமிழர்கள் போராடுவதை நிறுத்த வேண்டும் என்றாரா மதுரை ஆதினம்?
கல்வி உரிமை, நிதிப்பங்கீடு போன்ற எதற்கும் உதவாத விஷயங்களுக்கு போராடுவதை இனியேனும் தமிழர்கள் நிறுத்த வேண்டும் என்று மதுரை ஆதினம் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)