இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

ஹெலிகாப்டர் விபத்தில் மோடியை விசாரிக்க வேண்டும் என்றாரா சுப்ரமணியன் சுவாமி?
பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் பிரதமர் மோடியை விசாரிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

கழிவறையில் சீமான் படம் வரையப்பட்டதாக வதந்தி
சீமான் படத்தை கழிவறையில் வரைந்ததாக வைரலாகும் புகைப்படம் போலியானதாகும்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என பரவும் வதந்தி!
சுனாமி எச்சரிக்கை காரணமாக இன்று (15/12/2021) புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாக வைரலாகும் அறிக்கை போலியானதாகும்.

சென்னை நபரை கைது செய்த உபி போலீசார் என்று பரவும் செய்தியின் பின்னணி என்ன?
சென்னை நபரை, பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதால் கைது செய்த உபி காவல்துறை என்று பரவும் நியூஸ் கார்டு மற்றும் செய்தி புதியது அல்ல.

மாரிதாஸ் கைதினை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்தாரா அர்ஜூன் சம்பத்?
மாரிதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அர்ஜூன் சம்பத் அறிவித்ததாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)