இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

கர்நாடகாவில் ‘அல்லாஹூ அக்பர்’ கோஷமிட்டு வைரலான மாணவியின் புகைப்படமா இது? உண்மை என்ன?
கர்நாடகாவில் காவித்துண்டு அணிந்து மறித்த மாணவர்களுக்கு முன்பாக அல்லாஹூ அக்பர் கோஷமிட்டு, ஹிஜாப் அணிந்து சென்ற பெண் இவர்தான் என்று பரவுகின்ற புகைப்படம் தவறானதாகும்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லையெனில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றாரா மு.க.ஸ்டாலின்?
நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லையெனில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

தமிழ்நாடு பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசச் சொன்னதே அண்ணாமலைதான் என்றாரா கருக்கா வினோத்?
தமிழ்நாடு பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசச் சொன்னதே மாநிலத்தலைவர் அண்ணாமலைதான் என்று கைதான கருக்கா வினோத் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

மதக்கலவரத்தை தூண்டும் செயலை பாஜக நிறுத்தினால்கூட தமிழக மக்கள் அவர்களை ஏற்க மாட்டார்கள் என்றாரா எடப்பாடி பழனிசாமி?
மதக்கலவரத்தை தூண்டும் செயலை பாஜக நிறுத்தினால்கூட தமிழக மக்கள் அவர்களை ஏற்க மாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

சமீபத்தில் காலமான பாடகி லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகளா இவை?
சமீபத்தில் காலமான பாடகி லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகள் என்பதாக பரவுகின்ற தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)