2025 ஜனவரி முதல் அனைத்து சனி, ஞாயிறுகளும் அரசு விடுமுறை என்று பரவும் செய்தி திரிக்கப்பட்டது. இது பலவருடங்களாகவே நடைமுறையில் இருக்கும் அரசாணை அறிவிப்பே ஆகும்.
அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கர் படம் வைத்து போராட்டம் நடத்தப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் புகைப்படம் இந்திய நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்டதல்ல, அப்படம் கர்நாடக சட்டமன்றத்தில் எடுக்கப்பட்டதாகும்.
‘வங்கதேச இந்துக்களை பற்றி எனக்கு கவலையில்லை’ என்று எழுதப்பட்ட கைப்பையை பிரியங்கா காந்தி வைத்திருந்ததாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.