இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அந்த வகையில் இந்த வாரம் பிரசுரமாகிய செய்திகளுள் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு:


மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை மாற்றி ஆணை வெளியிடுகிறாரா பிரதமர்?
பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை மாற்றி ஆணை வெளியிடவிருப்பதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

இந்திய ஒற்றுமை பயணத்தில் சபரிமலை போராளியை சந்தித்தாரா ராகுல் காந்தி?
ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தின்போது சபரிமலை போராளி ஒருவரை சந்தித்ததாக பரவும் படம் பழைய படமாகும்

தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடும்போது கீழே விழுந்தாரா?
தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடும்போது கீழே விழுந்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

சென்னையில் கழிவுநீர் வடிகால் மேல் கட்டப்பட்டிருந்த பிளாட்ஃபார்ம் உடைந்து 5 பேர் சாக்கடைக்குள் விழுந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
சென்னையில் கழிவுநீர் வடிகால் மேல் கட்டப்பட்டிருந்த பிளாட்ஃபார்ம் உடைந்து 5 பேர் சாக்கடைக்குள் விழுந்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)