வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkசிபிஐ சம்மன் அனுப்பியதால் தலைமறைவான சவுக்கு சங்கர் எனப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

சிபிஐ சம்மன் அனுப்பியதால் தலைமறைவான சவுக்கு சங்கர் எனப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: சிபிஐ சம்மன் அனுப்பியதால் தலைமறைவான சவுக்கு சங்கர்
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

சிபிஐ சம்மன் அனுப்பியதால் தலைமறைவான சவுக்கு சங்கர் என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“ஜி ஸ்கொயர் மற்றும் சபரிசன் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் கூறிய குற்றச்சாட்டுகள் அடிப்படையில் சோதனை செய்ததில் எதுவும் கிடைக்காததால் உரிய ஆதாரத்துடன் தங்கள் அலுவலகத்தில் ஆஜராகும்படி சவுக்கு சங்கருக்கு CBI சம்மன். சம்மனுக்கு பதில் அளிக்காமல் சவுக்கு சங்கர் தலைமறைவு” என்று இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.

Screenshot from Twitter @dravidam_100
Screenshot from Twitter @BaskerSerode

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: நொச்சிக்குப்பம் மீன் விற்பனைக் கடைகள் இடிக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check/Verification

சிபிஐ சம்மன் அனுப்பியதால் தலைமறைவான சவுக்கு சங்கர் என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

ABP Nadu வெளியிட்டதாக அவர்களுடைய லோகோவுடனான நியூஸ்கார்டாக வைரலாகும் புகைப்படம் பரவி வருகின்ற நிலையில் மே 02, 2023 அன்று சவுக்கு சங்கர் தலைமறைவு என்று ஏதேனும் செய்தி வெளியிட்டிருக்கிறார்களா என்று அவர்களுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் தேடினோம்.

ஆனால், ABP Nadu ஊடகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் அப்படி செய்தி எதுவும் வெளியாகியிருக்கவில்லை. எனவே, ABP Nadu ராஜாவைத் தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது; அப்படி எந்த செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை” என்று தெளிவுபடுத்தினார்.

ABP Nadu வெளியிட்டிருந்த நியூஸ்கார்ட்டினை மாதிரியாகக் கொண்டு இந்த வைரல் நியூஸ்கார்டினை உருவாக்கியுள்ளனர் என்பது இதன்மூலம் தெளிவாகியது.

ABP Nadu News Card
Viral Fake News Card

சவுக்கு சங்கரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்திலும் CBI சம்மன் குறித்து எந்தவித தகவலும் இடம்பெற்றிருக்கவில்லை. மேலும், இன்றும் அவர் சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவுகளை இட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: ராம் ஐயர் டிபன் கடையில் அசைவ உணவு விற்பதாக பரவும் எடிட் புகைப்படம்!

Conclusion

சிபிஐ சம்மன் அனுப்பியதால் தலைமறைவான சவுக்கு சங்கர் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
News Card model From, ABP Nadu, Dated May 02, 2023
Phone Conversation With, Raja, ABP Nadu, Dated May 03, 2023
Twitter Post From, Savukku Shankar, Dated May 03, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular