சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeEntertainmentவிஜய் பட்டா கத்தியுடன் வாரிசு வெற்றியை கொண்டாடியதாக பொய் செய்தி வெளியிட்ட தினமலர்!

விஜய் பட்டா கத்தியுடன் வாரிசு வெற்றியை கொண்டாடியதாக பொய் செய்தி வெளியிட்ட தினமலர்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பட்டா கத்தியுடன் வாரிசு வெற்றியை  நடிகர் விஜய் கொண்டாடியதாக பத்திரிக்கைச் செய்தி ஒன்று ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பட்டா கத்தியுடன் வாரிசு வெற்றியை  நடிகர் விஜய் கொண்டாடியதாக பரவும் பத்திரிக்கைச் செய்தி
image of Dinamalar Newspaper

இச்செய்தியை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பட்டா கத்தியுடன் வாரிசு வெற்றியை  நடிகர் விஜய் கொண்டாடியதாக பரவும் பத்திரிக்கைச் செய்தி
Screengrab from Twitter @KuskithalaV6
பட்டா கத்தியுடன் வாரிசு வெற்றியை  நடிகர் விஜய் கொண்டாடியதாக பரவும் பத்திரிக்கைச் செய்தி
Screengrab from Facebook/ Vhp Ariyalur
பட்டா கத்தியுடன் வாரிசு வெற்றியை  நடிகர் விஜய் கொண்டாடியதாக பரவும் பத்திரிக்கைச் செய்தி
Screengrab from Facebook/ Hindu Shanmugavel

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கேந்திரிய வித்யாலயாவிற்கு சிபாரிசு கடிதம் வழங்கிய எம்பி கனிமொழி என்று பரவும் பழைய தகவல்!

Fact Check/Verification

பட்டா கத்தியுடன் வாரிசு வெற்றியை  நடிகர் விஜய் கொண்டாடியதாக பத்திரிக்கைச் செய்தி ஒன்று ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக இச்செய்தி எந்த பத்திரிக்கையில் எப்போது வெளிவந்தது என்பது குறித்து தேடினோம். இத்தேடலில் இச்செய்தி தினமலர் நாளிதழில் இன்று (24/01/2022) பிரசுரிக்கப்பட்டுள்ளது என அறிய முடிந்தது.

பட்டா கத்தியுடன் வாரிசு வெற்றியை  நடிகர் விஜய் கொண்டாடியதாக பரவும் பத்திரிக்கைச் செய்தி
image of Dinamalar Newspaper

இதனையடுத்து இச்செய்தி உண்மையானதா என ஆய்வு செய்தோம். இதில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தின் சக்ஸஸ் மீட்  சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்துள்ளது என்பதையும், இந்த மீட்டில் விஜய், இசையமைப்பாளர் தமன், இயக்குனர் வம்சி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் என்பதையும் அறிய முடிந்தது.

இந்நிகழ்வில் எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படங்கள் சில இணையத்தளங்களில் வைரலாகியது. அவற்றுடன் விஜய் கையில் பட்டா கத்தியுடன் இருக்கும் படம் ஒன்றும் வைரலானது.அப்படத்தை அடிப்படையாக வைத்தே பட்டா கத்தியுடன் வாரிசு வெற்றியை  நடிகர் விஜய் கொண்டாடியதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

பட்டா கத்தியுடன் வாரிசு வெற்றியை  நடிகர் விஜய் கொண்டாடியதாக பரவும் பத்திரிக்கைச் செய்தி
Vijay’s Viral Image

ஆகவே இதனையடுத்து உண்மையில் வைரலாகும் இப்படம் வாரிசு சக்சஸ் மீட்டில் எடுக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய அப்படம் குறித்து ஆய்வு ஆய்வு செய்தோம். அப்படத்தை கூர்மையாக உற்று நோக்குகையில் அதில் EDITXGIRI என்று ஒரு வார்த்தை எழுதி இருப்பதை நம்மால் காண முடிந்தது.

பட்டா கத்தியுடன் வாரிசு வெற்றியை  நடிகர் விஜய் கொண்டாடியதாக பரவும் பத்திரிக்கைச் செய்தி

அதை அடிப்படையாக வைத்து தேடியதில்,  அது விஜய் ரசிகர் ஒருவரின் டிவிட்டர் ஐடி என்பதை அறிய முடிந்தது. அவரே வைரலாகும் இப்படத்தை எடிட் செய்து அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பதும் தெளிவானது.

இந்த பதிவின் கமெண்டில் தினமலர் செய்தியை பகிர்ந்து, என்ன ப்ரோ? என்று ஒருவர் கேட்க, அவன் உண்மை என்று நம்பினால் நான் என்ன செய்வது? என்று இவர் பதிலளித்திருந்ததை காண முடிந்தது.

அதேபோல் தினமலர் டிவிட்டர் ஐடியை டேக் செய்து வைரலாகும் படம் ஒரு ஃபேன் எடிட் படம் என்று இவர் குறிப்பிட்டுள்ளதையும் நம்மால் காண முடிந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் விஜய் ரசிகர் ஒருவர் எடிட் செய்த பகிர்ந்த புகைப்படத்தை உண்மை என்று நம்பி தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

Also Read: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 2 கிராம் தங்க காசு வழங்க திமுக திட்டமிட்டுள்ளதா?

Conclusion

பட்டா கத்தியுடன் வாரிசு வெற்றியை  நடிகர் விஜய் கொண்டாடியதாக தினமலர் வெளியிட்ட செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Tweet from @EditxGiri dated Jan 23, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular