வெள்ளிக்கிழமை, ஜூன் 14, 2024
வெள்ளிக்கிழமை, ஜூன் 14, 2024

HomeFact Checkவேலுப்பிள்ளை பிரபாகரனின் தற்போதைய புகைப்படம் என்று பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

வேலுப்பிள்ளை பிரபாகரனின் தற்போதைய புகைப்படம் என்று பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

வேலுப்பிள்ளை பிரபாகரன், விடுதலைப்புலிகள் தலைவரான இவருடைய தற்போதைய புகைப்படம் என்பதாக புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”தமிழ் இனத்தின் போராளி மேதகு பிரபாகரன் அவர்களின் புதிய புகைப்படம்” என்பதாக அவர் வயதான தோற்றத்தில், தாடியுடன் இருப்பது போன்று புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.

Screenshot from Facebook/jawahar.r.100
Screenshot From Facebook/gopi.venkat.52493

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இப்புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

Also Read: ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதா?

Fact Check / Verification

வேலுப்பிள்ளை பிரபாகரனின் தற்போதைய புகைப்படம் என்று பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

அப்போது, வைரலாகும் புகைப்படம் கருப்பு-வெள்ளையில் இருந்த நிலையில் அதனை சமூக வலைத்தளங்களில் தேடியபோது கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் OneTamilNews என்கிற செய்தி இணையதளத்தில் “விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கோமா நிலையில் இருந்து வெளியே வந்தார்?” என்கிற தலைப்பில் வெளியான கட்டுரையில் வைரலாகும் புகைப்படம் வண்ணத்தில் இடம் பெற்றிருந்தது. அதிலும், குறிப்பிட்ட புகைப்படத்தின் உண்மைத்தன்மை தெரியவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்புகைப்படத்தை தரவிறக்கம் செய்து தேடியபோது ”மீண்டும் உயிருடன் பிரபாகரன்” என்று கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ட்விட்டர் பக்கம் ஒன்றில் அப்புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து, வைரல் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த 2019ஆம் ஆண்டு சுதன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் அன்று பதிவிட்டிருந்த முழு வண்ண புகைப்படம் ஒன்று நமக்குக் கிடைத்தது. இயக்குனர் மோகன் ஜியும் கடந்த 2020 ஆம் ஆண்டு இதே புகைப்படத்தைப் பகிர்ந்து பிரபாகரன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த புகைப்படமும், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பரவும் வைரல் புகைப்படமும் ஒன்றே என்பதை அதிலிருந்த ஒற்றுமைகள் மூலமாக நம்மால் கண்டறிய முடிந்தது. EelamView என்கிற இணைய இதழிலும் இப்புகைப்படத்தின் உண்மையான புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

உருவத்தை இளமையாக, முதுமையாக அமைக்கும் செயலிகள் மூலமாக இந்த புகைப்படத்தையே எடிட் செய்து பரப்பி வருகிறார்கள் என்பதும் இதன் மூலம் உறுதியானது.

Also Read: கடலூர்-புதுச்சேரி புதிய சாலை என்று பகிரப்படும் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே புகைப்படங்கள்!

Conclusion

வேலுப்பிள்ளை பிரபாகரனின் தற்போதைய புகைப்படம் என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Sources
Twitter Post From, Sudhan Nayagam, Dated November 26, 2019
Image Gallery From, EelamView
Image Gallery From, VelupillaiPrabhakaran.Wordpress



(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular