செவ்வாய்க்கிழமை, ஜூலை 23, 2024
செவ்வாய்க்கிழமை, ஜூலை 23, 2024

HomeFact Checkநடிகர் சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை பாலியல் புகாரளித்ததாக வதந்தி!

நடிகர் சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை பாலியல் புகாரளித்ததாக வதந்தி!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

நடிகர் சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நாயகி மரியா ரியாபோஷப்கா பாலியல் குற்றச்சாட்டு அளித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

நடிகர் சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நாயகி மரியா ரியாபோஷப்கா பாலியல் குற்றச்சாட்டு அளித்ததாக பரவும் நியூஸ்கார்ட்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளியன்று பிரின்ஸ் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் நாயகியாக உக்ரைனை சேர்ந்த  மரியா ரியாபோஷப்கா என்பவர் நடித்திருந்தார். இவர் பிரின்ஸ் படப்பிடிப்பில் சிவகார்த்தியன் அவரிடம் தவறாக நடந்துகொண்டார் என்று புகாரளித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

நடிகர் சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நாயகி மரியா ரியாபோஷப்கா பாலியல் குற்றச்சாட்டு அளித்ததாக பரவும் நியூஸ்கார்ட் - 01
Screenshot from Facebook /HateAjith
நடிகர் சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நாயகி மரியா ரியாபோஷப்கா பாலியல் குற்றச்சாட்டு அளித்ததாக பரவும் நியூஸ்கார்ட் - 02
Screenshot from Facebook /Balaji Dindigul
நடிகர் சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நாயகி மரியா ரியாபோஷப்கா பாலியல் குற்றச்சாட்டு அளித்ததாக பரவும் நியூஸ்கார்ட் - 03
Screenshot from Facebook /தமிழன் விஷ்ணு

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கேரளாவில் 32000 பெண்கள் இஸ்லாமியத்துக்கு மதம் மாற்றப்பட்டு ISIS தீவிரவாதிகளால் சீரழிக்கப்பட்டதாக பரவும் வீடியோவின் உண்மை பின்னணி!   

Fact Check/Verification

நடிகர் சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நாயகி மரியா ரியாபோஷப்கா பாலியல் குற்றச்சாட்டு அளித்ததாக  வைரலாகும் நியூஸ்கார்டில் காணப்படும் எழுத்துரு (Font) வழக்கமாக நக்கீரனில் பயன்படுத்தும் எழுத்துருவிலிருந்து வேறுபட்டிருந்தது. போதாதற்கு எழுத்துப்பிழைகள் சிலவும் அதில் இருந்தது.

நடிகர் சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நாயகி மரியா ரியாபோஷப்கா பாலியல் குற்றச்சாட்டு அளித்ததாக பரவும் நியூஸ்கார்ட் - 04
(Spelling error marked in viral newscard)

இதனையெல்லாம் வைத்து பார்க்கையில் இது போலியான நியூஸ்கார்டாக இருக்கலாம் எனும் சந்தேகம் நமக்கு ஏற்பட்டது. இருப்பினும் பலர் இந்த நியூஸ்கார்டை உண்மை என்று எண்ணி பகிர்ந்து வருவதால் இதுக்குறித்து முழுமையாக ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

முன்னதாக இவ்வாறு சம்பவம் நடந்தததாக பொது ஊடகங்களில் செய்தி வந்துள்ளதா என தேடினோம். இதில் இவ்வாறு ஒரு நிக்ழ்வு நடந்ததாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து, இந்த நியூஸ்கார்டானது நக்கீரனின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால் நக்கீரன் இந்த செய்தியை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.  

இதில் வைரலாகும் இவ்வாறு நியூஸ்கார்டை நக்கீரன் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. மாறாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று நக்கீரன் தரப்பில் மறுப்பு தெரிவித்திருந்ததை காண முடிந்தது. இதனடிப்படையில் காண்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை அறிய முடிகின்றது.

Also Read: அனைவருக்கும் செல்வத்தை தரும் மாயன் வானியல் சாஸ்திர தகடு இலண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பதாக வதந்தி!

Conclusion

நடிகர் சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நாயகி மரியா ரியாபோஷப்கா பாலியல் குற்றச்சாட்டு அளித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட்  போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Tweet, from Nakkheeran, on November 9, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular