சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact CheckFact Check: இறந்தவரின் இறுதிச்சடங்கிற்கு தடையாக இருந்த நாம் தமிழர் கட்சியினர் என்று பரவும் செய்தி...

Fact Check: இறந்தவரின் இறுதிச்சடங்கிற்கு தடையாக இருந்த நாம் தமிழர் கட்சியினர் என்று பரவும் செய்தி உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: இறந்தவரின் இறுதிச்சடங்கிற்கு தடையாக குறிப்பிட்ட சமூகத்தினருடன் இணைந்து பாதையை மறித்த நாம் தமிழர் கட்சியினர்
Fact: வைரல் தகவல் தவறான புரிதலுடன் பரவுகிறது. நாம் தமிழர் கட்சியினர் இறந்தவரின் ஊர்வலத்தில் கலந்து கொண்டதாகவே வைரல் பதிவில் இணைக்கப்பட்டுள்ள செய்தி புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறந்தவரின் இறுதிச்சடங்கிற்கு தடையாக குறிப்பிட்ட சமூகத்தினருடன் இணைந்து பாதையை மறித்த நாம் தமிழர் கட்சியினர் என்று செய்தி கட்டுரைப் புகைப்படத்துடன் கூடிய பதிவொன்று சமூக வலைத்தளத்தில் காமராஜ் என்பவரால் பகிரப்பட்டுள்ளது.

Screengrab from Twitter @SengaiKamaraj

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாலிவுட் நடிகர் ஷாருக் கான் சமீபத்தில் அவரது கல்லூரி சான்றிதழை வெளியிட்டதாக பரவும் 2016 ஆம் ஆண்டு படம்!

Factcheck / Verification

இறந்தவரின் இறுதிச்சடங்கிற்கு தடையாக குறிப்பிட்ட சமூகத்தினருடன் இணைந்து பாதையை மறித்த நாம் தமிழர் கட்சியினர் என்று பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

The News Minute வெளியிட்டிருந்த செய்திக்கட்டுரையையே ஷேர் செய்து குறிப்பிட்ட ட்விட்டர் பதிவு இடப்பட்டுள்ள நிலையில், அக்கட்டுரையை முழுமையாக ஆராய்ந்தோம். குறிப்பிட்ட கட்டுரையில், ”இறந்தவரின் உடலைப் புதைக்க எடுத்துச் சென்ற ஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சியினரும் இடம்பெற்றிருந்தனர்” என்றே குறிப்பிட்ட செய்தியில் இடம்பெற்றுள்ளது.

தமிழில் வெளியாகிய செய்திகளிலும், புரட்சி பாரதம் என்னும் பட்டியலினத்தவர்களுக்கான கட்சி சார்பில் வெளியாகியுள்ள ஃபேஸ்புக் பதிவிலும் நாம் தமிழர் கட்சியினரும் இறந்தவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தனர்; உடலைப் புதைப்பதற்கு பொதுமக்களுடன் இணைந்து போராடினர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

நெல்லையில் பட்டியலின சமூகத்தவரின் உடலைப் புதைக்க மற்றொரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் தடுத்த சம்பவம் குறித்த செய்தியை இங்கே மற்றும் இங்கே படியுங்கள்.

Also Read: ரஷ்ய பாராளுமன்றத்தில் காமராஜர் படம் இடம்பெற்றிருப்பதாக பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!

Conclusion

இறந்தவரின் இறுதிச்சடங்கிற்கு தடையாக குறிப்பிட்ட சமூகத்தினருடன் இணைந்து பாதையை மறித்த நாம் தமிழர் கட்சியினர் என்று பரவும் செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
News Report From, The News Minute, April 05, 2023
YouTube Video From, News 18 Tamil Nadu, Dated April 04, 2023 Facebook Post From, Puratchi Bharatham Party, Dated April 04, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular