ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact CheckFact Check: கங்கை இறங்கும் காட்சி என்று பரவும் நியூசிலாந்து நீர்வீழ்ச்சி வீடியோ!

Fact Check: கங்கை இறங்கும் காட்சி என்று பரவும் நியூசிலாந்து நீர்வீழ்ச்சி வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: கங்கை இறங்கும் காட்சி

Fact: வைரலாகும் வீடியோ நியூசிலாந்தில் எடுக்கப்பட்டதாகும்.

கங்கை இறங்கும் காட்சி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Screenshot from Twitter @balup13248255

Archived Link

Screenshot from Facebook/Sridevi

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை தன்னிடம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தாரா ஈபிஎஸ்?

Fact Check/Verification

கங்கை இறங்கும் காட்சி என்று பரவும் வீடியோ குறித்த பின்புலம் பற்றிய உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஜூன் 30ஆம் தேதியன்று “beautifulterminus” என்கிற ட்ராவல் குறித்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டிருந்தது.

Instagram will load in the frontend.

 “Heaven is under our feet as well as over our heads.. Milford sound @rajdeep_jimmy” என்கிற தலைப்பில் இந்த வீடியோ காட்சி ஷேர் செய்யப்பட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த ராஜ்தீப் என்பவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்ந்தபோது அவர் ஒரு Traveller என்பது தெரிய வந்தது.

அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் கடந்த ஜூன் 18 அன்று, “Heaven is under our feet as well as over our heads.. Milford sound” என்று இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதிலிருந்து, வைரலாகும் வீடியோ நியூசிலாந்தின் Milford Sound சுற்றுலாதலத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகியது.

Instagram will load in the frontend.

அவர் தன்னுடைய சமூகவலைத்தளத்தில் இந்த நியூசிலாந்து சுற்றுலா குறித்து மேலும் பல வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Instagram will load in the frontend.

மேலும், அவரது வீடியோவில் சற்று தூரத்தில் காணப்படும் சுரங்க வாகனப்பாதை இடம்பெற்றுள்ள படங்கள் Milford Sound குறித்த கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளதையும் இங்கே மற்றும் இங்கே இணைத்துள்ளோம்.

Also Read: லண்டனில் ஆர்.கே.சுரேஷை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய அண்ணாமலை என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

கங்கை இறங்கும் காட்சி என்று பரவும் வீடியோ நியூசிலாந்து  Milford sound சுற்றுலாத்தலத்தில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Insta Post From, Rajdeep Jimmy, Dated June 18, 2023
Article From,
milfordsoundtourism.nz


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular