திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkபிரதமர் மோடி அத்வானியை அவமதித்தாரா?

பிரதமர் மோடி அத்வானியை அவமதித்தாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பிரதமர் மோடி அத்வானியை அவமதித்தார்

Fact: இத்தகவல் தவறானதாகும். பிரதமரும் அத்வானியும் சகஜமாக உரையாடிக் கொண்டிருந்த படத்தை வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது.

“தகுதி இல்லாதவனை வளர்த்து விட்டால் நீயே தகுதி இல்லாமல் போவாய் என்பதற்கு இந்த படம் ஒரு சான்று” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று பரவி வருகின்றது.

பிரதமர் மோடி அத்வானியை அவமதித்ததாக பரப்பப்படும் தகவல்

Twitter Link | Archived Link

பிரதமர் மோடி அத்வானியை அவமதித்ததாக பரப்பப்படும் தகவல்

Facebook Link

பிரதமர் மோடி அத்வானியை அவமதித்ததாக பரப்பப்படும் தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: குஜராத்தின் இரண்டு வழிச்சாலை என பரவும் பல்கேரியா நாட்டின் சாலை!

Fact Check/Verification

பிரதமர் மோடி அத்வானியை அவமதித்ததாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் கெட்டி இமேஜஸ் பக்கத்தில் மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவாக, அவரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டதாக கூறி புகைப்படம் ஒன்று இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. அப்படமும் வைரலாகும் படமும் ஒரே நிகழ்வில் எடுக்கப்பட்டது என நம்மால் அறிய முடிந்தது.

பிரதமர் மோடி அத்வானியை அவமதித்ததாக பரப்பப்படும் தகவல்

இதனை அடிப்படையாக வைத்து தேடியதில் பாரதி ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இவ்விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று டிசம்பர் 24, 2018 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இவ்வீடியோவின் 15 ஆவது நிமிடத்தில் பிரதமர் மோடி அவர் இருக்கையிலிருந்து எழுந்து அத்வானியை நோக்கி சென்று, அவருக்கு வணக்கம் செலுத்துவதையும், அத்வானி அவருக்கு மறு வணக்கம் செலுத்துவதையும், இதனைத் தொடர்ந்து இருவரும் உரையாடிக் கொண்டிருப்பதையும் காண முடிகின்றது. இந்த உரையாடலின்போது அத்வானி இரு கைகளையும் பிணைத்துக் கொண்டு நிற்பதையும் காண முடிந்தது.

இதனடிப்படையில் காண்கையில்  பிரதமரும் அத்வானியும் சகஜமாக உரையாடிக் கொண்டிருக்கும் படத்தை வைத்து, பிரதமர் அத்வானியிடம் அவமரியாதையாக நடந்ததாக தவறான தகவல் ஒன்று திரித்து பரப்பப்படுகின்றது என்பது தெளிவாகின்றது.

Also Read: நோட்டாவை விட பாஜக விரைவில் தமிழகத்தில் அதிக ஓட்டு வாங்கும் என்று கூறினாரா பிரசாந்த் கிஷோர்?

Conclusion

பிரதமர் மோடி அத்வானியை அவமதித்ததாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Getty Images
Youtube Video from BJP, Dated December 24, 2018

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular