திங்கட்கிழமை, ஜூலை 22, 2024
திங்கட்கிழமை, ஜூலை 22, 2024

HomeFact CheckViralதிமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!

திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்துகின்றனர்.
Fact: வைரலாகும் வீடியோ ஒரு புனைவு வீடியோவாகும்.

சிறுவன் ஒருவன் கையில் மது பாட்டிலை வைத்துக் கொண்டு, அதை குடித்து கீழே விழுவதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது எனவும், திமுகவின் ஆட்சியே இதற்கு காரணம் என்றும் கூறி இந்த வீடியோ பரப்பப்பட்டு வருகின்றது.

திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோ
Screenshot from Twitter@Johni_raja
திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோ
Screenshot from Facebook/praba.m.79
திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோ
Screenshot from Facebook/mathi.arts.5

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாஜக எம்எல்ஏ காரில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கினார்களா?

Fact Check/Verification

திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். வைரலாகும் வீடியோவை தனித்தனி கீ ஃபிரேம்களாக பிரித்து அதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில் ‘timli_king_bhilpradesh_15’ எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் இந்த வீடியோ ஏப்ரல் 29 அன்று பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. அதில் ‘இந்த வீடியோ பொழுபோக்குகாக உருவாக்கப்பட்ட வீடியோ’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோ
Screengrab from Instagram/timli_king_bhilpradesh_15

தொடர்ந்து அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்ததில் வைரலாகும் வீடியோவுடன் சேர்த்து, இதுபோன்று பல வீடியோக்களை உருவாக்கி  இருப்பதை காண முடிந்தது. ஆனால் அவற்றில் பெரும்பாலும் குஜராத்தி மொழி பாடல்களை பயன்படுத்தப்பட்டிருந்தது. இதனடிப்படையில் பார்க்கையில் இந்த வீடியோவானது  கண்டிப்பாக தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டதல்ல என அறிய முடிகின்றது.

கிடைத்த ஆதார்ங்களின்படி காண்கையில் நமக்கு தெளிவாகுவது என்னவென்றால்,

  1. வைரலாகும் வீடியோவானது பொழுது பொக்குக்காக உருவாக்கப்பட்ட ஒரு புனைவு வீடியோவாகும்.
  2. அதேபோல் அந்த வீடியோவுக்கும் தமிழ்நாட்டிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

Also Read: கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்துக் கொண்டு போலீசார் மீது கல்லெறிந்தவர்கள் பிடிபட்டதாக பரவும் வதந்தி!

Conclusion

திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோ ஒரு புனைவு வீடியோ என்பதும், இவ்வீடியோவை அடிப்படையாக வைத்து சிறுவர்கள் மது அருந்தவதாக பரப்பப்படும் தகவல் தவறானது என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Instagram post from @timli_king_bhilpradesh_15, Dated April 29, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular