இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:-

பெட்ரோல் , டீசல் விலையேற்றத்தைக் கண்டித்து மாட்டுவண்டியில் போராட்டம் நடத்தினாரா பாஜக தலைவர் அண்ணாமலை?
பெட்ரோல் டீசல் விலையேற்றத்தைக் கண்டித்து மாட்டுவண்டியில் வந்து பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தியதாகப் பரவுகின்ற செய்தி தவறானதாகும்.

தமிழகத்தில் இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் எனப்பரவும் போலி நியூஸ்கார்டு!
தமிழகத்தில் இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.

அதிகம் பொய் பேசும் நபராக அருணன் முதலிடம்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
அதிகம் பொய் பேசும் நபராக பேராசிரியர் அருணன் முதலிடம் பெற்றதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது. ஆனால் அப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்ற செய்தியில் அவர் தலையில் கலசம் வைத்துள்ள படத்தை பயன்படுத்தியதா நியூஸ் 7 தமிழ்?
பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்ற செய்தியில் அவர் தலையில் கலசம் வைத்துள்ள படத்தை நியூஸ் 7 தமிழ் பயன்படுத்தியதாக கூறி நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது. ஆனால் அப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

சொந்த பயன்பாட்டு வாகனத்தை வாடகைக்கு விட்டால் கைது; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
சொந்த பயன்பாட்டு வாகனத்தை வாடகைக்கு விட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநரும் கைது செய்யப்படுவார் என்று சைலேந்திர பாபு கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)