வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkதிமுக வெற்றியைக் கொண்டாட 2.5 கோடி ரூபாய் கேக் வெட்டப்பட்டதா?

திமுக வெற்றியைக் கொண்டாட 2.5 கோடி ரூபாய் கேக் வெட்டப்பட்டதா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

திமுக வெற்றியைக் கொண்டாடும் வகையில் திமுக தலைவர் மற்றும் முதல்வராகப் பதவியேற்க இருக்கும் மு.க.ஸ்டாலின் மூலமாக ஆர்டர் செய்யப்பட்டு துபாயில் செய்யப்பட்டு தனி விமானத்தில் கொண்டுவரப்பட்ட 2.5 கோடி ரூபாய் கேக் என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.

திமுக
Source: Facebook

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக கட்சி, வருகின்ற மே 7 ஆம் தேதியன்று ஆட்சியமைக்க உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் அனுமதி பெற்ற நிலையில், வருகின்ற மே 7 ஆம் தேதியன்று தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.

இந்நிலையில், திமுக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைக் கொண்டாட மே 3 ஆம் தேதியன்று மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்றதைக் கொண்டாட கேக் ஒன்று வெட்டப்பட்டதாகவும், அதன் விலை 2.5 கோடி என்பதாகவும் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

குறிப்பிட்ட அந்தப் பதிவில்,“ஸ்டாலினால் ஆர்டர் செய்யப்பட்டு துபாயில் செய்யப்பட்டு தனி விமானத்தில் கொண்டு வரப்பட்டது. இதன் விலை 2.5 கோடி ரூபாய். தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஸ்டாலின் வீட்டில் வெட்டப்பட்டது இந்தக் கேக்.” என்று துர்கா ஸ்டாலின் மற்றும் கேக் இடம்பெற்றுள்ள புகைப்படத்துடன் செய்தி பரவுகிறது.

திமுக
Source: Facebook

Facebook Link

திமுக
Source: Facebook

Facebook Link

திமுக
Source: Facebook

Facebook Link

திமுக
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

திமுக வெற்றியைக் கொண்டாடும் வகையில், முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் மு.க.ஸ்டாலின் மூலமாக துபாயில் இருந்து ஆர்டர் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட 2.5 கோடி ரூபாய் கேக் என்று பரவும் தகவல் குறித்து ஆய்வு செய்தோம்.

அதன் முடிவில், சென்னையைச் சேர்ந்த Cake Square என்கிற கடை இந்த கேக்கினை குறித்து தாங்கள் மு.க.ஸ்டாலின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இதனைத் தயாரித்துள்ளதாகப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

திமுக
Source: Facebook

Facebook Link

திமுக
Source: Facebook

Facebook Link

மேலும், துபாயில் செய்யப்பட்ட கேக் என்று பரவும் செய்தி குறித்தும் அது போலி என்று Cake Square சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக
Source: Facebook

Facebook Link

தொடர்ந்து, குறிப்பிட்ட புகைப்படத்தில் துர்கா ஸ்டாலினுடம் இடம் பெற்றிருப்பவர் திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மாலதி என்பதும், அவர் குறிப்பிட்ட அந்த கேக்கை மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திமுக வெற்றியைக் கொண்டாடும் வகையில் வழங்கியுள்ளார் என்பதும் அவரது ட்விட்டர் பதிவின் மூலமாக நம்மால் அறிந்து கொள்ள முடிந்தது.

Source: Twitter

தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான தந்தி டிவியும் இதுகுறித்த செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.

source: YouTube

தொடர்ந்து, கேக் ஸ்கொயரின் தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறிப்பிட்ட அந்த கேக் அவர்களால் தயாரிக்கப்பட்டது; அதன் விலை 30 ஆயிரம் ரூபாய் என்பதையும் நாம் உறுதிப்படுத்திக் கொண்டோம்.

Conclusion:

திமுக வெற்றியைக் கொண்டாடும் வகையில், முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் மு.க.ஸ்டாலின் மூலமாக துபாயில் இருந்து ஆர்டர் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட 2.5 கோடி ரூபாய் கேக் என்று பரவும் தகவல் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Thanthi Tv: https://www.youtube.com/watch?v=k3doVXcJ3_Y

Cake Square: https://www.facebook.com/cakesquarechennaicity/posts/3910599578988465

Dr.S.Malathy Narayanasami: https://twitter.com/MalathyDr/status/1389159315886415874?s=20

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular