Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ரேஷன் பொருட்கள் பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பினை வெளியிட்டதாக சில செய்தி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றன.
குறிப்பிட்ட அந்த வைரல் செய்தித்தொகுப்பில் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி சேனல் “உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் வெளியீடு” என்கிற பிரிவில் ரேஷன் பொருட்கள் பெறுவதற்கான கட்டுப்பாடுகள் என்று வெளியிட்ட செய்தி புகைப்படங்கள் பரப்பப்படுகின்றன.
“விடியாத அரசின் விடியல் பரிதாபங்கள்” என்கிற தலைப்பில் பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நாம் தமிழர் கட்சியில் இருந்து சாட்டை துரைமுருகன் மீண்டும் நீக்கப்பட்டாரா?
Fact check/Verification
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ரேஷன் பொருட்கள் பயனாளர்களுக்கான கட்டுப்பாடுகளை வெளியிட்டதாகப் பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலில் வைரலாகும் புகைப்படம் குறித்த செய்தியை தேடுகையில், நியூஸ் 18 நிறுவனத்தின் இச்செய்தியை மையமாக வைத்து கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே திமுக தலைமையிலான அரசிற்கு எதிரான பதிவுகள் வைரலாகியது நமக்குத் தெரிய வந்தது. ஆனால், அதுகுறித்த வீடியோ நமக்குக் கிடைக்கவில்லை.
எனவே, வைரலாகும் நியூஸ் 18 கார்டில் உள்ள செய்தியாளர் மனோஜ் பிரபாகரிடம் பேசினோம். அவர் தற்போது ஏபிபி நாடு தமிழ்நாடு ஆசிரியராக இருக்கிறார். எனவே, அவர் தற்போது நியூஸ் 18 செய்தி சேனலில் இல்லை என்பது உறுதியானது. இதுகுறித்து விளக்கமளித்த அவர், குறிப்பிட்ட அச்செய்தி அதிமுக ஆட்சிக்காலத்தில் 2016-17 ஆண்டில் வந்தது என்றும், தேதி சரியாக நினைவில்லை என்றும் கூறினார்.
தொடர்ந்து, நியூஸ் 18 சேனலின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தேடியபோது, ஜூலை 31 2017 அன்று குறிப்பிட்ட ரேஷன் கட்டுப்பாடுகள் குறித்த செய்தி இடம்பெற்றுள்ளது என்பதும் நமக்குக் கிடைத்தது.
மேலும், இதனைத் தொடர்ந்து இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்திருந்தார் அப்போதைய அதிமுக அரசின் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். எனவே, தற்போது பரவும் செய்தி தவறான நோக்கத்துடன் வைரலாக்கப்பட்டு வருகிறது. திமுக அரசு இதுபோன்ற அறிவிப்பினை வெளியிட்டதாக செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Conclusion:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ரேஷன் பொருட்கள் பயனாளர்களுக்கான கட்டுப்பாடுகளை வெளியிட்டதாகப் பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources
Manoj Prabhakar- Editor, ABP Naadu
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.