வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkவாடகை வீட்டிலிருப்பவர்கள் 18% GST செலுத்த வேண்டுமா?

வாடகை வீட்டிலிருப்பவர்கள் 18% GST செலுத்த வேண்டுமா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

வாடகை வீட்டிலிருப்பவர்கள் 18% GST செலுத்த வேண்டும் என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் 18%  GST வரி கட்ட வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்ததாக பரவும் தகவல்

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும், அவர்களின் வாடகையோடு சேர்த்து 18% GST வரியும் கட்ட வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இதனை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் 18%  GST வரி கட்ட வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்ததாக பரவும் தகவல் - 01

Twitter Link | Archive Link

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் 18%  GST வரி கட்ட வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்ததாக பரவும் தகவல் - 02

Facebook Link

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் 18%  GST வரி கட்ட வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்ததாக பரவும் தகவல் - 03

Facebook Link

Also Read: பாஜகவில் தொடர்வது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றாரா நயினார் நாகேந்திரன்?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் 18% GST கட்ட வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்ததாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக ஜிஎஸ்டி கவுன்சிலின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை ஆய்வு செய்து, 47 ஆவது ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கையை கண்டறிந்தோம். இந்த அறிக்கையில் குடியிருப்புகளை வியாபாரத்திற்காக பயன்படுத்துபவர்கள் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

Press Release
Screenshot of Press Release

Full Report: https://gstcouncil.gov.in/sites/default/files/press-release/PIB1838020.pdf

இதனைத் தொடர்ந்து தேடுகையில், வைரலாகும் இத்தகவல் தவறானது என்று தெளிவு செய்து PIB அதன் டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அப்பதிவில்,

  1. குடியிருப்பு பகுதியை வணிக நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்படும்போது மட்டுமே வாடகைக்கு வரி விதிக்கப்படும்
  2. தனிப்பட்ட நபருக்கு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வாடகைக்கு விடப்படும் போது GST இல்லை
  3. தனிப்பட்ட பயன்பாட்டிற்காக நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது பங்குதாரர் குடியிருப்பை வாடகைக்கு எடுத்தாலும் GST இல்லை.

என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Also Read: 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசுக்கு 2.8 லட்சம் கோடி இழப்பு என்று செய்தி வெளியிட்டதா டைம்ஸ் ஆஃப் இந்தியா?

Conclusion

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும், அவர்களின் வாடகையோடு சேர்த்து 18% GST வரியும் கட்ட வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்ததாக பரவும் தகவல் தவறானது என்பதும், குடியிருப்பு பகுதியை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்துபவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

(இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் ஆங்கிலத்திலும் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.)

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: Missing Context

Sources

PIB’s Tweet, tweeted on 12/08/2022
GST Council’s Press Release


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular