வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkஇஸ்லாமியப் பெண்ணிற்கு நிற்காத பேருந்தை கர்நாடகாவில் உடைத்ததாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?

இஸ்லாமியப் பெண்ணிற்கு நிற்காத பேருந்தை கர்நாடகாவில் உடைத்ததாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: இஸ்லாமியப் பெண்ணிற்கு நிற்காமல் சென்ற பேருந்தை கர்நாடகாவில் அடித்து உடைத்த முஸ்லீம்கள்

Fact: வைரலாகும் வீடியோ சூரத்தில் எடுக்கப்பட்டதாகும். 

இஸ்லாமியப் பெண்ணிற்கு நிற்காமல் சென்ற கர்நாடகா பேருந்து அடித்து உடைக்கப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியில் பஸ்ஸில் பெண்களுக்கு இலவச பயணம் அறிந்ததே. இஸ்லாமியப் பெண் பேருந்தை நிறுத்த கைகாட்டியும் பேருந்து நிற்காமல் சென்றதன் விளைவைப் பாரீர். ஆனால் இவர்களை அரசாங்கம் எதுவும் செய்யாது. அவர்களில் தயவால்தான் அங்கு ஆட்சியே நடக்கிறது. தமிழ்நாடு, மேற்கு வங்கத்திலும்” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from X @14Sathya

Archived Link

Screenshot from Facebook/vasan.muthugani

Facebook Link

இஸ்லாமியப் பெண்ணிற்கு
Screenshot from Facebook/ganeshvlr.maruthi

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்தியில் பேசிய மோடியிடம் ‘எதுக்கு புரியாம பேசற’ என்றாரா கனிமொழி?

Fact Check/Verification

இஸ்லாமியப் பெண்ணிற்கு நிற்காமல் சென்ற பேருந்தை கர்நாடகாவில் அடித்து உடைத்த முஸ்லீம்கள் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை ஆராய்ந்தபோது அது கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஹரியானா வன்முறை என்கிற பெயரில் பரவியிருந்ததும், அதனுடைய உண்மையறியும் சோதனையை நாம் வெளியிட்டிருந்ததும் நமக்கு உறுதியானது. அதே வீடியோ தற்போது கர்நாடகா வீடியோ என்று பரவுவதும் நமக்கு உறுதியானது.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோவில் இடம்பெற்று இருக்கும் சிட்டிலிங்க் என்கிற பேருந்து வாசகம் மூலமாக அது குஜராத் மாநிலம் சூரத்தின் பொதுபோக்குவரத்து பேருந்து என்பதை நம்மால் அறிய முடிந்தது.

இதுகுறித்து ஜூலை 05, 2019 அன்று Divyang News Channel என்கிற சேனலிலும் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றிருப்பது போன்ற சேதமடைந்த பேருந்து ஒன்றைக் காண முடிந்தது. மேலும், இரண்டு வீடியோக்களிலும் பின்னணி இடமும் ஒன்றே என்பதை அறிய முடிந்தது.

சூரத் குவாஜாதானா தர்காவில் இருந்து மக்காய் குளம் வரை நடைபெற்ற VMF என்கிற அமைப்பு நடத்திய பேரணியில் கலந்து கொண்டவர்களால் ஏற்பட்ட சேதம் என்பதாக இந்த செய்தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் இடம்பெற்றுள்ளது.

ABP Asmita சேனலிலும் இந்த குறிப்பிட்ட வீடியோ இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, வைரலாகும் வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு சூரத் வன்முறையில் எடுக்கப்பட்ட காட்சி என்பது உறுதியாகிறது.

Also Read: சில்க் ஸ்மிதாவுக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றாரா அர்ஜூன் சம்பத்?

Conclusion

இஸ்லாமியப் பெண்ணிற்கு நிற்காமல் சென்ற பேருந்தை கர்நாடகாவில் அடித்து உடைத்த முஸ்லீம்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது; சூரத்தில் எடுக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகிறது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Report from Times of India, Dated July 06, 2019

YouTube Video From, Divyang News Channel, Dated July 05, 2019
YouTube Video From, ABP Asmita, Dated July 05, 2019


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular