Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: காஸா மீது பழிக்கு பழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
Fact: பரவும் வீடியோ கடந்த 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
காஸா மீது பழிக்கு பழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”நம்மோட எதிரியை நிர்மூலமாக்கும் வித்தையை இஸ்ரேலிடம் இருந்து இந்தியா கற்க வேண்டும்! குண்டு வச்சவனுக்கு 20 வருடம் சிறையில் பிரியாணி போட்டு ரோம்சாமி பிறந்த நாளில் விடுதலை பண்ணுங்கன்னு சொல்ல வைக்க கூடாது!” என்று இந்த வீடியோ வைரலாகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழக பாஜக என்னும் தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார் அண்ணாமலை என்று கூறினாரா ஹெச்.ராஜா?
Fact Check/Verification
காஸா மீது பழிக்கு பழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் என்பதாக பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அப்போது, வைரல் வீடியோவானது கடந்த 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்கு உறுதியாகியது.
நம்முடைய தேடலில் குறிப்பிட்ட வைரல் வீடியோ Daily motion இணையதளத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே பதிவு செய்யப்பட்டிருப்பதை நாம் கண்டறிந்தோம்.
Al Jazeera English, Middle east eye ஆகிய செய்தி நிறுவனங்களும் கடந்த மே 12, 2021 அன்று இந்த வீடியோவை வெளியிட்டுள்ளன. இதில், Al Jazeera வெளியிட்ட வீடியோவில் இருந்தே இந்த வைரல் வீடியோ எடுக்கப்பட்டு பரவி வருகிறது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
Al-Shorouk Tower, என்கிற காஸா கட்டிடத்தின் மீது கடந்த 2021 ஆம் ஆண்டு இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோ இது என்பது செய்திகள் மூலமாக நமக்கு உறுதியாகியது.
Also Read: திமுக ஆட்சியில் கொடிவேரி அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்டதாக பரவும் பழைய வீடியோ!
Conclusion
காஸா மீது பழிக்கு பழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் என்று பரவும் வீடியோ கடந்த 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
YouTube Video From, Al Jazeera English, Dated May 12, 2021
News Report From, NYPost, Dated May 13, 2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.