வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkநெஞ்சுவலியால் சீமான் மருத்துவமனையில் அனுமதி என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

நெஞ்சுவலியால் சீமான் மருத்துவமனையில் அனுமதி என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: நெஞ்சுவலியால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதி

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக பரவி வருகிறது.

நெஞ்சுவலியால் சீமான் மருத்துவமனையில் அனுமதி என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”சீமானுக்கு நெஞ்சு வலி ! நெஞ்சுவலி காரணமாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி|” என்று இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.

நெஞ்சுவலியால்
Screenshot from X @dmk_rajan

Archived Link

Screenshot from Facebook/Aarif

Facebook Link

Screenshot from facebook/mohamed.ravoof.9

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கேரள லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக வைக்கப்பட்டதா?

Fact Check/Verification

நெஞ்சுவலியால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதி என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் தந்தி டிவி பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தோம். ஆனால், அவர்களுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் அவ்வாறு எந்த நியூஸ்கார்டும் இடம்பெற்றிருக்கவில்லை.

மேலும், வைரலாகும் நியூஸ்கார்டில் இடம்பெற்றுள்ள புகைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடர் அலைச்சல் மற்றும் ஓய்வின்மை காரணமாக திருவெற்றியூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மயங்கி விழுந்த சம்பவத்துடன் தொடர்புடையது என்பதையும் அதுகுறித்த வீடியோ செய்தி மூலமாக நாம் உறுதி செய்து கொண்டோம்.

தொடர்ந்து, வைரல் நியூஸ்கார்ட் குறித்து தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் வினோத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது; அதனை தந்தி டிவி வெளியிடவில்லை” என்று உறுதி செய்தார்.

Also Read: கத்தாரில் காரை நசுக்கும் ஆக்டோபஸ் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Conclusion

நெஞ்சுவலியால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதி என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with, Vinoth, Thanthi TV Digital, Dated October 13, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular