பங்களாதேஷில் இந்து மாணவர்கள் இஸ்லாமிய மாணவர்களால் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். மூன்று கல்லூரிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலுக்கு மதச்சாயம் பூசி இத்தவறான தகவல் பரப்பப்படுகின்றது.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு தவெக தொண்டர்களுக்கு அனுமதி இலவசம் என்று பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். அனுமதி அட்டை உள்ளவர்கள் மட்டுமே இந்நிகழ்வில் அனுமதிக்கப்படுவர்.
விஜய் இருவேறு நிகழ்ச்சிகளில் ஒரே பெண்ணுக்கு நிவாரணம் அளித்ததாக பரவும் தகவல் தவறானதாகும். வைரலாகும் படத்திலிருக்கும் பெண்கள் வெவ்வேறானவர்கள்; ஒரே பெண் அல்ல.