Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
அணு உலை வெடித்துச் சிதறியதே துருக்கி பூகம்பத்திற்கு காரணம் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“துருக்கி, சிரியா, லெபனான் பூமி அதிர்ச்சியா அல்லது எதிரிகளின் சதியா ? கீழே உள்ள வீடியோ பாருங்க முதலில் அணு உலை வெடித்து சிதறியது. பிறகு தான் பூகம்பம் ஏற்பட்டு உள்ளது. ஆகாய தாக்குதலின் பரிணாம வளர்ச்சியாக பூமியில் இருந்து தாக்குதல் தொடுக்க முன்னோட்டமா இந்த சம்பவம்” என்பதாக இந்திய தேசிய லீக் கட்சியைச் சேர்ந்த தடா ஜெ.ரஹீம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்பதிவை தற்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: துருக்கி நிலநடுக்கம்-உலகை உலுக்கிய புகைப்படங்கள் என்று தவறான, தொடர்பற்ற படங்களை பகிர்ந்த தந்தி டிவி!
Fact Check / Verification
அணு உலை வெடித்துச் சிதறியதே துருக்கி பூகம்பத்திற்கு காரணம் என்பதாக வைரலாகும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரல் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச்க்கு உள்ளாக்கியபோது குறிப்பிட்ட வைரல் வீடியோ கடந்த ஆகஸ்ட் 7, 2020 ஆம் ஆண்டு Global News யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது நமக்குக் கிடைத்தது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த ஆகஸ்ட் 4, 2020 ஆம் ஆண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது என்பதையும் பல்வேறு செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. பட்டாசுகளுடன் இந்த அம்மோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டிருந்ததே விபத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே படியுங்கள். இந்த வீடியோவே தற்போது அணு உலை வெடிப்பால் ஏற்பட்ட துருக்கி நிலநடுக்கம் என்பதாகப் பரவி வருகிறது.
Also Read: துருக்கி நிலநடுக்கம் என்று பரவும் 2020 ஆம் ஆண்டு வீடியோ!
Conclusion
அணு உலை வெடித்துச் சிதறியதே துருக்கி பூகம்பத்திற்கு காரணம் என்பதாக வைரலாகும் வீடியோ கடந்த ஆகஸ்ட் 4, 2020ஆம் ஆண்டு லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் எடுக்கப்பட்டது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
YouTube Video From, Global News, Dated August 07, 2020
Report From, CBS News, Dated August 06, 2020
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.