சனிக்கிழமை, நவம்பர் 23, 2024
சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

Yearly Archives: 2022

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

பாரத மாதா படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமியப் பெண்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?

பாரத மாதா படத்தை வைக்க இஸ்லாமியப் பெண் எதிர்ப்பு தெரிவித்ததாக பரவும் வீடியோ தவறானதாகும்.

மதுரை மேயர் பதவிக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை என்றாரா மாரிதாஸ்?

மதுரை மேயர் பதவிக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை என்று யூடியூபர் மாரிதாஸ் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

அரியலூர் மாணவி மரணத்தில் பாஜகவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தாரா திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்?

அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்கும் பாஜகவின் போராட்டம் நியாயமானது என்று திமுக எம்.பி எஸ்.ஜெகத்ரட்சகன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

நீங்கள் தமிழர் என்றால் உங்கள் குடி என்ன என்று ராகுல் காந்தியை நோக்கி கேள்வி எழுப்பினாரா சீமான்?

நீங்கள் தமிழர் என்றால் உங்கள் குடி என்ன என்பதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ராகுல் காந்தி குறித்து கேள்வி எழுப்பியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

ஆடி மாதத்தில் தம்பதிகள் பிரிவதுபோல் அதிமுகவும் பாஜகவும் பிரிந்துள்ளது என்றாரா முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகள் பிரிவதுபோல் அதிமுகவும் பாஜகவும் தற்காலிகமாக பிரிந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

பசுக்களுக்கு இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தாரா நிர்மலா சீத்தாராமன்?

பசுக்களுக்கு இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று 2022 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்ததாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

ஒரு வார்டில் தோற்றாலும் பதவியை ராஜினாமா செய்வேன் என்றாரா வானதி சீனிவாசன்?

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வார்டில் பாஜக தோற்றாலும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

பிரதமர் நரேந்திர மோடி மனைவி ஜசோதாபென் காங்கிரஸில் இணைந்தாரா?

பிரதமர் நரேந்திர மோடி மனைவி ஜசோதாபென் காங்கிரஸில் இணைந்தார் என்பதாகப் பரவுகின்ற வீடியோ செய்தி தவறானதாகும்.

மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோயின் கதை என்று வைரலாகும் பதிவின் உண்மை பின்னணி!

மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோயின் சோகக் கதை என்று வைரலாகும் பதிவு தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read